சைவ உணவோ அல்லது அசைவ உணவஓ, உணவே மருந்து என்பது உலகம் உணர்ந்த உண்மை. அசைவ உணவே சிறந்தது என பெரும்பாலானவர்கள் அதற்கு ஆதரவு தெரிவித்தாலும், சைவ உணவுக்காரர்கள் மட்டும் தங்கள் தரப்பை சொல்லாமல் விட்டு விடுவார்களா என்ன?
சைவமோ அசைவமோ எதுவாக இருந்தாலும், உணவு உட்கொள்ளலின் அடிப்படை உயிர்வாழ்தலே. உயிர் வாழ்தல் என்ற அடிப்படை விசயம் முடிவடைந்த பிறகு, உணவின் சுவை, ஊட்டச்சத்து, ஆரோக்கியம், உடல்நலன் என பல்வேறு பரிமாணங்கள் உணவைப் பற்றி பட்டியலிடப்படுகின்றன.
வகைவகையாய் உணவு சமைப்பதும் அதை பக்குவமாய் பாங்காய் படைப்பதும் ஒரு கலை என்றால், உண்பதும் ஒரு கலையே என்று உணவு ரசிகர்கள் சொல்வார்கள்.
எது எப்படியிருந்தாலும் சரி, பசியாறுதல், சுவை, ஊட்டச்சத்து, நோய் எதிர்ப்பு சக்தி, உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம் என்ற பட்டியல்களில் வரும் உணவுகளின் பட்டியலிலும் கம்பளிப்பூச்சியில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு உணவும் இடம் பிடித்திருக்கிறது.
மேலும் படிக்க | ஸ்வீட் எடு கொண்டாடு: இந்த ஆசைய கட்டுப்படுத்துறகு ஈஸி
தற்போது, மேற்கத்திய கலாச்சாரங்களில் பிரபலமடைந்து வரும் உணவு வகைகளில் உண்ணக்கூடிய பூச்சிகள் மற்றும் புழுக்கள் அதிக அளவில் இருக்கின்றன. ஆனால் இந்த போக்கை மற்றொரு உணவுப் பழக்கமாக பார்க்கக்கூடாது என, உணவு மானுடவியலாளர் அன்னா டிராபிடோ (food anthropologist Anna Trapido) வலியுறுத்துகிறார்.
இதற்கு காரணம் என்ன தெரியுமா? தென்னாப்பிரிக்க இரசாயனப் பொறியாளர் வெண்டி வெசெலா (Wendy Vesela), புரதம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்த பச்சை மற்றும் கருப்பு கம்பளிப்பூச்சிகளை மாவாக மாற்றும் வழிகளைக் கண்டுபிடித்துள்ளார்.
அவை சுவையான பிஸ்கட்கள் மற்றும் இனிப்பு சாக்லேட் புரத பார்கள், தானியங்கள் அல்லது ஸ்மூத்திகளில் பயன்படுத்தப்படலாம். “மொப்பேன் புழுக்கள்” (mopane worms) என்று பிரபலமாக அறியப்படும் உண்ணக்கூடிய கம்பளிப்பூச்சிகளை உணவாக அவர் மாற்ற விரும்புகிறார்.
பலருக்கு, குறிப்பாக மேற்கு ஐரோப்பியப் பின்னணியில் இருந்து, பூச்சிகளை உண்பது தொடர்பான பயம் மற்றும் தடை உள்ளன. ஆனால் அவை ஊட்டச்சத்துக்கான மதிப்புமிக்க ஆதாரமாக இருக்க முடியும் என்று கம்பளிப்பூச்சியை சாக்லேட்டாக மாற்றும் வெண்டி வெசெலா கூறுகிறார்.
உணவை உற்பத்தி செய்வது சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிப்பதை இப்படி மாற்று உணவுகள் மூலம் தடுக்கலாம் என்றும், கம்பளிப்பூச்சிகளில் இருந்து தயாரிக்கப்படும் மொப்பேன் துண்டுகளை பீட்சா டாப்பிங்ஸாகவும் பயன்படுத்தலாம் என்றும் வெண்டி வெசெலா கூறுகிறார்.
மேலும் படிக்க | இனிப்பு சுவையின் அடிப்படை அம்சங்கள் என்ன தெரியுமா?
தனது கரிமப் பொருட்களுக்கு உள்நாட்டு மற்றும் சர்வதேச வாடிக்கையாளர்களைக் கண்டுபிடித்துள்ளதாக வெசெலா கூறுகிறார். ஜோகன்னஸ்பர்க்கின் சான்டன் மாவட்டத்தில் சமீபத்தில் நடந்த உணவுக் கண்காட்சியில் கரப்பான் பூச்சியில் தயாரிக்கபப்ட்ட பிஸ்கட் மற்றும் புரோட்டீன் பார்களை வெசெலா விற்க முயன்றார் என்று AFP செய்தி வெளியிட்டுள்ளது.
“என்னால் புழுவை சாப்பிட முடியாது, அதைப் பார்த்தால் அருவருப்பாக இருக்கும். ஆனால் நீங்கள் அதை எனக்கு சாக்லேட் வடிவில் கொடுத்தால், அதை நான் சாப்பிடுவேன் மிகவும் சுவையாக இருக்கும் என்பதோடு, ஆரோக்கியத்திற்கும் நலல்து” என்று 38 வயதான கெயில் ஒடெண்டால் என்பவர் வெசெலாவின் சாக்லேட் பார்களை வாங்கிச் சென்றதாக AFP கூறுகிறது.
தென்னாப்பிரிக்காவின் சூடான மற்றும் வறண்ட பகுதிகளில் வளரும் மொப்பேன் மரங்களை உண்டு இனப்பெருக்கம் செய்து வாழும் கம்பளிப்பூச்சிகள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை.
அவற்றுக்கு கூடுதல் நீர் அல்லது நிலம் தேவையில்லை என்பதோடு, சந்தையில் உள்ள பல உணவுகளை விட கம்பளிப்பூச்சிகளில் புரதம் மிக அதிக அளவில் உள்ளது உணவியல் நிபுணர், Mpho Tshukudu கூறினார்.
மேலும் படிக்க | உங்கள் சிறுநீரகம் சுத்தமாக உள்ளதா: தெரிந்துகொண்டு சுத்தப்படுத்துவது எப்படி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3hDyh4G
Apple Link – https://apple.co/3loQYeR