ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லிபியாவின் அதிபர் கடாஃபி அண்மையில் மறைந்தார். அவரது மறைவுக்கு பிறகு அங்கு அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது.
தற்போதைய அரசுக்கு எதிர்ப்பை தெரிவித்துவரும் நாட்டு மக்கள் தொடர் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தின் உச்சகட்டமாக டாப்ரக் நகரில் அமைந்துள்ள லிபிய நாட்டின் நாடாளுமன்றத்தை பொதுமக்கள் சூறையாடி உள்ளனர்.
அலர்கள் அத்துடன் நில்லாமல், நாடாளுமன்ற கட்டடத்துக்கும் அவர்கள் தீ வைத்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு படை வீரர்களை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தியதால் அவர்களால் தீயை உடனே அணைக்க முடியாமல் போனது.
போராட்டக்காரர்களை போலீசார் அடக்கி பின்பே தீயணைப்பு பணிகள் தொடங்கின. அதற்குள் மளமளவென பரவி தீயின் விளைவாக விளைவாக நாடாளுமன்ற அலுவலக ஆவணங்கள் தீக்கிரையாகி சாம்பல் ஆகின.
வெள்ளத்தில் மிதக்கும் சிட்னி – வீடுகளை விட்டு வெளியேற உத்தரவு!
லிபிய நாடாளுமன்ற கட்டடத்துக்கு தீ வைக்கப்பட்டுள்ள சம்பவத்துக்கு ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய யூனியன் ஆகியவை கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.