மைசூருவில், விடுதியில் ஒன்றாகத் தங்கியிருந்த டோலிவுட் நடிகர் நரேஷ் மற்றும் நடிகை பவித்ரா லோகேஷை, நரேஷின் மூன்றாவது மனைவி ரம்யா ரகுபதி செருப்பால் அடிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஏராளமான தெலுங்கு திரைப்படங்களில் நடித்தவரான நரேஷ், தனது மூன்றாவது மனைவியான ரம்யா ரகுபதியிடம் இருந்து விவகாரத்து கோரி விண்ணப்பித்திருந்தார்.
நரேஷும், துணை நடிகை பவித்ரா லோகேஷும் தங்கியிருந்த விடுதிக்கு வந்த ரம்யா ரகுபதி அவர்களை ஆபாசமாகத் திட்டி விட்டு செருப்பால் அடிக்க முற்பட்ட போது அங்கிருந்த போலீசார் அவரை தடுத்தனர்.