இந்தியா – இங்கிலாந்து இடையிலான 5ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அணி வீரர்கள் விராட் கோலி மற்றும் ஜானி பேர்ஸ்டோ வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சிகள் இணையதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
3ஆம் நாள் ஆட்டத்தின் போது, இந்திய வீரர் கோலி, இங்கிலாந்தின் பேர்ஸ்டோ ஆகியோர் பரஸ்பரம் வார்த்தைப் பரிமாற்றத்தில் ஈடுபட்டனர்.
இதனை அடுத்து, கிரீஸில் நிற்கும்படியும், அமைதியாக விளையாடும் படியும் பேர்ஸ்டோவிடம் கோலி சைகையில் காட்டியது வீடியோவில் பதிவானது.