சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே இளைஞர்கள் 3 பேரை காரில் கடத்திச் சென்று சரமாரியாகத் தாக்கிய கும்பல், பின் ஆளை மாற்றி கடத்தி விட்டதாக கூறி அவர்களை விடுவித்துள்ளனர்.
மேச்சேரி அருகே உள்ள டீக்கடையில் டீ குடித்து கொண்டிருந்த 3 பட்டதாரி இளைஞர்களை ஒரு கும்பல் கத்தியை காட்டி மிரட்டி காரில் அழைத்து சென்று ஏரிக்கரையில் இறக்கி விட்டுள்ளனர்.
அங்கு 10க்கும் மேற்பட்டோர் அவர்களை அடித்து உதைத்ததுடன், கொலை செய்து விடுவதாக மிரட்டிய போது கூட்டத்தில் இருந்த ஒருவன் தான் கடத்தி வர கூறியது இவர்களை அல்ல என்றதும் அவர்களை விட்டு விட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.