இந்தியாவின் வடகிழக்கு மாநிலத்தில் கனமழை: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 179

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதினால் . பல்வேறு பகுதிகளில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பல பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. கனமழை, நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு போன்ற இயற்கை பேரிடரால் அம்மாநிலத்தின் 23 மாவட்டங்கள் கடுமையான பாதிக்கப்பட்டுள்ளன.

சுமார் 22 இலட்சம் பேர் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளனர். கனமழை, வெள்ளத்தால் பல்வேறு பகுதிகளில் வீதி, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.. பல வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. வெள்ளப்பெருக்கு காரணமாக இலட்சக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை, கனமழை வெள்ளத்தால் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், அசாம் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 179 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே 174 உயிரிழப்புகள் ஏற்பட்டிருந்த நிலையில் இன்று மேலும் 5 பேர் உயிரிழந்ததால் அந்த எண்ணிக்கை 179 ஆக அதிகரித்துள்ளது.

நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ள நிலையில் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.