ஹாங்காங்-சீனாவில் புயலில் சிக்கி சேதம் அடைந்த கப்பலில் இருந்து கடலில் விழுந்த மூன்று பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
மேலும், 27 பேரை தேடும் பணி தீவிரமாக நடக்கிறது.நம் அண்டை நாடான சீனாவில் சமீபத்தில் புயல் உருவானது, இதற்கு ‘சாபா’ என பெயரிடப்பட்டுள்ளது. புயல் காரணமாக கடலின் தென்பகுதியில் கொந்தளிப்பு ஏற் பட்டுள்ளது. புயலில் சிக்கிய ஒரு கப்பலை மீட்க சீன கடற்படையினர் கடும் முயற்சிகள் செய்தனர். கடல் கொந்தளிப்பில் சிக்கி தள்ளாடிய கப்பல் நேற்று முன் தினம் அதிகாலை இரண்டாக உடைந்தது.
நேற்று முன் தினம் இரவு, புயல் கரையை கடந்தது. கப்பலில் இருந்த 30 பேர் கடலில் விழுந்து தத்தளித்தனர். கப்பலும் மூழ்கத் துவங்கியது. இதுவரை மூன்று பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 27 பேரை மீட்கும் பணியில் சீன கடற்படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
ஹாங்காங்-சீனாவில் புயலில் சிக்கி சேதம் அடைந்த கப்பலில் இருந்து கடலில் விழுந்த மூன்று பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், 27 பேரை தேடும் பணி தீவிரமாக நடக்கிறது.நம் அண்டை நாடான சீனாவில்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.