டாடாவின் ஏர் இந்தியாவில் வேலை மொத்தமாக இன்டர்வியூக்கு போன பைலட், ஊழியர்கள் விமானங்களை இயக்க முடியாமல் தவித்த நிறுவனம்

புதுடெல்லி:  ஏர் இந்தியா வேலைக்கான இன்டர்வியூவுக்கு 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட பைலட், ஊழியர்கள் போய் விட்டதால், விமானங்களை இயக்க முடியாமல் தனியார் விமான நிறுவனம் தவித்தது. விமான போக்குவரத்து துறையில்  இண்டிகோ  நிறுவனம் முன்னணி வகிக்கிறது. இந்நிறுவனத்தின் நேற்று முன்தினம்  விமான சேவைகள் நாடு முழுவதும் பரவலாக  பாதிக்கப்பட்டன.  விமானத்தின் ஊழியர்கள்  பற்றாக்குறை காரணமாக 45 சதவீத விமானங்களை மட்டுமே சரியான நேரத்தில் இயங்கின என்பது ஒன்றிய விமான போக்குவரத்துறை அமைச்சக தரவுகள் மூலம் தெரியவந்தது. நேற்றும் ஊழியர்கள் தொடர்பான பிரச்னை ஏற்பட்டதால் சில விமானங்கள் தாமதமாகின. இது குறித்து விளக்கம் அளிக்குமாறு அந்த நிறுவனத்துக்கு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஏர் இந்தியாவை  டாடா நிறுவனம் சமீபத்தில் வாங்கியது.  இதில் புதிய ஊழியர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இதன் 2ம் கட்ட நேர்முக தேர்வு நேற்று முன்தினம் நடந்தது.  இதில் கலந்து கொள்வதற்காக இண்டிகோ  ஊழியர்கள், உடல் நிலை சரியில்லை என்ற காரணத்தை கூறி மொத்தமாக விடுப்பு எடுத்து சென்று விட்டனர். விமானங்களை இயக்க முடியாமல் போனதற்கு இதுவே காரணம் என கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.