சமூக ஊடகங்களில் எரிபொருளை தேடும் இலங்கை மக்கள்


தட்டுப்பாடு காரணமாக மக்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய பல்வேறு வழிகளில் எரிபொருளைக் பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றனர்.

சிலர் சமூக ஊடகங்களில் எரிபொருளுக்காக பல்வேறு கோரிக்கைகளை முன்வைப்பதை காணலாம்.

ஒரு லிட்டரின் விலையை பொருட்படுத்தாமல் எரிபொருள் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

வைத்தியசாலைக்கு சென்றவர்கள், வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியவர்கள் என பலர் இந்த கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போது நாட்டில் எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே எரிபொருளை இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் வெளியிடுகிறது.

சமூக ஊடகங்களில் எரிபொருளை தேடும் இலங்கை மக்கள் | Sri Lankans Looking For Fuel On Social Media

டொலர்களில் கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்ய வேண்டும்

இதேவேளை, எரிபொருள் தேவைப்படும் தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் எரிபொருளுக்கான கட்டணங்களை டொலர்களில் செலுத்தி பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தில் ஒதுக்கீட்டை பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளது.

ஒதுக்கீட்டை பெற்றுக் கொள்ள ஒரு மாதத்திற்கு முன்பணமாக செலுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் 12ம் திகதி முதல் நாளாந்தம் அல்லது வாராந்த அடிப்படையில் எரிபொருள் வழங்கப்படும் எனவும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.