இனிமே இறங்கி இறங்கி செல்ல வேண்டாம், சென்னையில் இருந்து நேரடி விமானம்… எந்த நாட்டிற்கு தெரியுமா?

தமிழகத்தின் தலைநகரான சென்னை தற்போது சர்வதேச முக்கியத்துவம் உள்ள நகரமாக மாறி விட்டதால் சென்னையிலிருந்து உலகின் பல முக்கிய நகரங்களுக்கு நேரடி விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் தற்போது எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் சென்னையிலிருந்து நாட்டிலுள்ள முக்கிய நகரமான அடிஸ் அபாபா என்ற நகரத்திற்கு நேரடி விமானத்தை இயக்கி உள்ளது.

ஏற்கனவே டெல்லி, மும்பை மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களில் இருந்து எத்தியோப்பிய நாட்டின் அடிஸ் அபாபா நகரத்திற்கு விமானங்கள் சென்று கொண்டிருக்கும் நிலையில் இனி நேரடியாக சென்னையிலிருந்தும் செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர் இந்தியா விமானம் தாமதம்..! 2 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு பெற்ற தம்பதிகள்..!

எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ்

எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ்

டெல்லி, மும்பை மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களில் இருந்து எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் அடிஸ் அபாபா நகருக்கு நேரடி விமானங்களை கடந்த பல ஆண்டுகளாக இயக்கி வருகிறது. இந்த நிலையில் நேற்று முதல் அடிஸ் அபாபா என்ற நகரத்திற்கும், சென்னைக்கும் நேரடி விமானம் இயக்கி வருகிறது. முதல் விமானம் நேற்று அடிஸ் அபாபா நகரத்தில் இருந்து சென்னைக்கு வந்தது என்பதும் இந்த விமானத்திற்கு சென்னை விமான நிலைய அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 வாரம் மூன்று முறை

வாரம் மூன்று முறை

இந்த விமானம் வாரத்திற்கு மூன்று முறை சென்னை மற்றும் அடிஸ் அபாபா நகரங்கள் இடையே பயணம் செய்யும் என்றும் சென்னைக்கு நேரடி பயணிகள் விமான இணைப்பு என்பது இதுவே முதல் முறை என்றும் எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் தலைமை அதிகாரி லெம்மா யதேச்சா குடேடாஅவர்கள் தெரிவித்துள்ளார். ஆனால் ஏற்கனவே சென்னைக்கு சரக்கு விமானங்களை எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் இயக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹைதராபாத் - அகமதாபாத்
 

ஹைதராபாத் – அகமதாபாத்

டெல்லி, மும்பை, பெங்களூர் மற்றும் சென்னை என நான்கு நகரங்களுக்கு நேரடியாக விமானத்தை இயக்கி வரும் எதியோப்பியன் ஏர்லைன் அடுத்ததாக ஹைதராபாத் மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களுக்கு சேவையை மேற்கொள்ள இருப்பதாகவும் அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் எத்தியோப்பியன் ஏர்லைன் தலைமை வணிக அதிகாரி லெம்மா யதேச்சா குடேடா அவர்கள் தெரிவித்துள்ளார்.

இந்தியா-எத்தியோப்பியா

இந்தியா-எத்தியோப்பியா

இந்தியா மற்றும் ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள நாடுகளுக்கு இடையே செல்லும் விமான பயணிகளின் எண்ணிக்கை தற்போது நாளுக்குநாள் அதிகரித்து வருவதாகவும் அதன் காரணமாகவே இந்தியாவில் உள்ள பல நகரங்களுக்கு எங்களுடைய விமான சேவை இயக்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

சென்னை - அடிஸ் அபாபா

சென்னை – அடிஸ் அபாபா

1966ஆம் ஆண்டு டெல்லியில் தனது முதல் தேவையை தொடங்கிய எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் அதன்பின் மும்பை மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களில் படிப்படியாக சேவையை ஆரம்பித்தது. மருத்துவம் மற்றும் சுற்றுலா பகுதியாக சென்னை தற்போது மாரி இருப்பதன் காரணமாகவே சென்னைக்கு நேரடியாக விமானத்தை ஏற்பாடு செய்திருப்பதாக குடேடா தெரிவித்துள்ளர.

மருத்துவம் - சுற்றுலா

மருத்துவம் – சுற்றுலா

தென் ஆப்பிரிக்காவிலிருந்து அதிக நோயாளிகள் சென்னை நகரத்துக்கு வந்து தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் குடேடா தெரிவித்துள்ளார். மேலும் ஆப்பிரிக்காவில் இருந்து ஏராளமான மாணவர்கள் சென்னை உள்பட தென் இந்தியாவின் பல நகரங்களில் படித்துக் கொண்டிருப்பதால் அவர்களுக்கு இந்த நேரடி விமானம் வசதியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சென்னை - அமெரிக்கா

சென்னை – அமெரிக்கா

மேலும் சென்னையிலிருந்து வாஷிங்டன், நியூயார்க் போன்ற அமெரிக்க நகரங்களுக்கு மற்றும் தென் அமெரிக்க நகரங்களுக்கு செல்வதற்கான நேரடி விமானங்கள் விரைவில் இயக்குவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐந்து கண்டங்கள்

ஐந்து கண்டங்கள்

ஐந்து கண்டங்களில் உள்ள 130க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு சர்வதேச பயணிகள் மற்றும் சரக்கு கப்பல்களை இயக்கி வருகிறோம் என்றும் விரைவில் ஆஸ்திரேலிய நாட்டில் நுழைய திட்டமிட்டு உள்ளோம் என்றும் குடேடா கூறியுள்ளார்.

52 நாடுகளின் நுழைவாயில்

52 நாடுகளின் நுழைவாயில்

இதுகுறித்து STIC டிராவல் குழும நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் தலைவரும், இந்தியாவில் உள்ள விமான நிறுவனத்தை பிரதிநிதித்துவப்படுத்தும்வருமான சுபாஷ் கோயல் கூறியபோது, ‘ஆப்பிரிக்காவின் 52 நாடுகளுக்கு அடிஸ் அபாபா நுழைவாயில் என்றும், தமிழ்நாட்டில் இருந்து, பல ஏற்றுமதியாளர்கள் ஆப்பிரிக்கா மற்றும் எத்தியோப்பியாவில் தொழிற்சாலைகளை நிறுவியுள்ளனர் என்றும், ஆப்பிரிக்காவில் இருந்து தமிழகத்திற்கு மருத்துவம் மற்றும் சுற்றுலா காரணங்களுக்காக வரும் பயணிகளுக்கு இந்த விமானம் மிகவும் வசதியாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Ethiopian airline launches from Chennai to Addis Ababa direct flight!

Ethiopian airline launches from Chennai to Addis Ababa direct flight | இனிமே இறங்கி இறங்கி செல்ல வேண்டாம், சென்னையில் இருந்து நேரடி விமானம்… எந்த நாட்டிற்கு தெரியுமா?

Story first published: Monday, July 4, 2022, 7:15 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.