அமைச்சரவையின் அனுமதியின் அடிப்படையில், 90,000 மெட்ரிக் தொன் பெட்ரோல் மற்றும் டீசலை எதிர்வரும் 7, 13 மற்றும் 15ஆம் திகதிகளில் இலங்கைக்குக் கொண்டுவரவுள்ளதாக ஐஓசி நிறுவனம் அறிவித்துள்ளது.
இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் எரிபொருளை, ஐஓசி நிறுவனத்திற்கு சொந்தமான 100 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக விநியோகிக்க இந்திய எண்ணெய் நிறுவனமான ‘ஐஓசி’ திட்டமிட்டுள்ளது.
நாட்டில் உள்ள 1190 பெட்ரோல் நிலையங்களில், இந்தியன் எண்ணெய் நிறுவனத்திற்கு 225 பெட்ரோல் நிலையங்களும், 225 பெட்ரோல் நிலையங்களில் 210 பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிலையங்களும் உள்ளன.
எரிபொருளை இலங்கைக்கு கொண்டுவர இந்திய நிறுவனம் முடிவு
அமைச்சரவை தீர்மானத்தின்படி, வெளிநாட்டு நிறுவனங்கள் நேரடியாக பெட்ரோல் மற்றும் டீசலை கொண்டுவருவதற்கும், இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு (சிபெட்கோ) சொந்தமான எரிபொருள் நிலையங்களைப் பயன்படுத்தி எரிபொருளை விற்பனை செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது, இந்தியன் எண்ணெய் நிறுவனத்திற்குச் சொந்தமான பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்யும் 210 எரிபொருள் நிரப்பு நிலையங்கள், ஊடாக நாளொன்றுக்கு சுமார் 1000 மெட்ரிக் தொன் பெட்ரோல் மற்றும் டீசலை விற்பனை செய்ய முடியும்.
இதன்படி, தலா 30,000 மெற்றிக் தொன் கொண்ட மூன்று பெட்ரோல் மற்றும் டீசல் கப்பல்களை எதிர்வரும் 07ஆம் திகதி முதல் இலங்கைக்கு கொண்டுவர இந்திய எண்ணெய் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்தக் கப்பல்கள் எதிர்வரும் 07ஆம், 13ஆம் மற்றும் 15ஆம் திகதிகளில் இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.