அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தீவிரமடைந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்பு ஒற்றைத் தலைமையை கொண்டு வர வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். ஓ பன்னீர்செல்வம் தரப்பு இரட்டைத் தலைமை தொடர வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் எடப்பாடி பழனிசாமியை கட்சியின் பொதுச் செயலாளராக நியமிப்பதற்கான ஏற்பாடுகளை அவரது ஆதரவாளர்கள் தீவிரமாக செய்து வருகின்றனர்.
கடந்த கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி பொது செயலாளர் நியமிப்பதற்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நீதிமன்றம் உத்தரவால் தீர்மானங்கள் நிறைவேற்றப்படவில்லை. ஆகையால், 11 ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்னலையில், அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. அதன்படி அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதி தடை விதிக்க கோரி பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. சண்முகம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவில். தாக்கல் செய்யப்பட்ட மூன்று கூடுதல் மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. எடப்பாடி பழனிசாமி, சிவி சண்முகம், ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் நீதிமன்ற உத்தரவை மீறியதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.