இலங்கையிலிருந்து அவசரமாக வெளிநாடு செல்லவுள்ளோருக்கான முக்கிய தகவல்


அவசரமாக வெளிநாடு செல்லவுள்ளவர்களுக்கு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் முக்கிய அறிவுறுத்தலொன்றை வழங்கியுள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தில் ஒரு நாள் சேவையின் மூலம் கடவுச் சீட்டை பெற்றுக்கொள்வதற்கு எதிர்வரும் 60 நாட்களுக்கான திகதியும், நேரமும் முற்கூட்டியே பதிவு செய்யப்பட்டு நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவசரமாக வெளிநாடு செல்வோருக்கான அறிவிப்பு

எனவே அவசர தொழில் நிமித்தமாக வெளிநாடு செல்லவுள்ள விண்ணப்பதாரிகள், தாம் அவசரமாக வெளிநாடு செல்ல வேண்டியதை உறுதிப்படுத்தும் ஆவணங்களை 070 63 11 711 என்ற தொலைப்பேசி இலக்கத்திற்கு வட்ஸ்அப் ஊடாக அனுப்பி திகதியை பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையிலிருந்து அவசரமாக வெளிநாடு செல்லவுள்ளோருக்கான முக்கிய தகவல் | Passport Distribution In Srilanka

சமர்பிக்கப்படும் ஆவணங்களின் உண்மைத்தன்மையை ஆராய்ந்ததன் பின்னரே துரிதமாக நாளொன்றும், நேரமும் வழங்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

கடவுச்சீட்டு வழங்கலில் ஒரு நாள் சேவை

அத்துடன், ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு வழங்கும் பணிகளை மாத்தறை, வவுனியா, மற்றும் கண்டி ஆகிய பிராந்திய அலுவலகங்களிலும் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இன்று முதல் இந்தப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையிலிருந்து அவசரமாக வெளிநாடு செல்லவுள்ளோருக்கான முக்கிய தகவல் | Passport Distribution In Srilanka

முதற்கட்டமாக ஒவ்வொரு பிராந்திய அலுவலகங்களிலும் முன்கூட்டியே பதிவு செய்த 100 பேருக்கு மாத்திரம் இந்தச் சேவை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு (www.immigration.gov.lk) பிரவேசித்து விண்ணப்பங்களை ஒப்படைப்பதன் மூலம் தமக்கான நாட்களை ஒதுக்கி கொள்ள முடியும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 11ஆம் திகதி முதல் குருநாகல் மாவட்ட பிராந்திய அலுவலகத்தின் ஊடாக கடவுச்சீட்டு விநியோக ஒருநாள் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.