சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் இன்று முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியுள்ளது. தொழில் முதலீட்டார்ளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் முன்னிலையில் 60 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. 70ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் வகையில், 60 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது. இதன்மூலம் ரூ.1.25 லட்சம் கோடிக்கு மேல் முதலீடுகள் கிடைக்கும் என்று எதிர்பாக்கப்படுகிறது
தமிழ்நாட்டில் முதலீடுகளை ஈர்க்கவும், வேலை வாய்ப்புகளை பெருக்கவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன்படி ஒரு பகுதியான `முதலீட்டாளர்களின் முதல் முகவரி- தமிழ்நாடு’ என்ற பெயரில் மாநாடுகளை நடத்தப்பட்ட முதலீடு ஈர்க்கப்பட்டு வருகிறது. கடந்த ஓராண்டில், தமிழ்நாட்டுக்கு 94 ஆயிரத்து 925 கோடி தொழில் முதலீடுகள் தமிழகம் வந்துள்ளதாகவும், இதன் மூலம் 2 லட்சத்து 26ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப் பட்டுள்ளதாகவும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், இன்ற மீடும் தமிழ்நாடு முதலீட்டு மாநாடு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று நடைபெற்று வருகிறத.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த மாநாட்டை தொடங்கி வைத்தார். அவரது தலைமையில், சுமார் 70 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் 60 ஒப்பந்தங்கள் கையெழுத்கிறது. இதன் மூலம் தமிழ்நாட்டில், 70 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடுகள் கிடைக்கும் என்றும் தொழில்துறை தெரிவித்து உள்ளது.
தொடர்ந்து, 21 புதிய தொழில்திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். இதுதவிர, 12 முடிவுற்ற திட்டங்களை அவர் தொடங்கி வைக்கிறார்