Father of Cell Phone Martin Cooper: இன்று கிட்டத்தட்ட அனைவரின் கைகளிலும் ஸ்மார்ட்போன் உள்ளது. ஸ்மார்ட்போன் பயன்பாடு இல்லாத வீட்டை கண்டுபிடிப்பது தான் சிரமம். ஒவ்வொரு வேலைக்கும் ஸ்மார்ட்போன்கள் முக்கியமானதாகிவிட்டது. இது மனிதர்களின் அத்தியாவசிய தேவைபோல வாழ்க்கையுடன் ஒன்றிவிட்டது.
ஷாப்பிங் முதல் பணம் அனுப்புதல், கேமிங் என அனைத்திற்கும் இந்த மொபைல் போன் பயன்படுகிறது. மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் இன்றியமையாததாக உள்ளது. மணிக்கணக்கில் பயனர்கள் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துகின்றனர்.
சில நிமிடங்களுக்கு உங்களிடம் ஸ்மார்ட்போன் இல்லாவிட்டாலும், உங்களுக்கு ஒரு பெரிய பிரச்னை இருப்பது போல் உணர்கிறீர்கள். ஆனால், செல்போனை கண்டுபிடித்தவர் எவ்வளவு நேரம் அதை பயன்படுத்துகிறார் என்று தெரியுமா?
Samsung Galaxy: வெறும் ரூ.17,000க்கு சாம்சங்கின் 55ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பிளாக்ஷிப் போன்!
செல்போன் கண்டுபிடிப்பாளர் மார்டின் கூப்பர்
இதை நீங்கள் எப்போதாவது சிந்தித்ததுண்டா? மார்ட்டின் கூப்பர் தான் செல்போனை கண்டுபிடித்தவராக அறியப்படுகிறார். இவர் ஒரு தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், தினசரி தான் எவ்வளவு நேரம் ஸ்மார்ட்போனை பயன்படுத்துகிறேன் என்பது குறித்து தகவல் வெளியிட்டுள்ளார்.
Twitter Deal: எலான் மஸ்க் வசம் கூடுதல் தகவல்கள் – முடிவு எடுப்பதில் தாமதம் ஏன்?
1973ஆம் ஆண்டு மார்ட்டின் கூப்பர் என்பவரால் மொபைல் போன் கண்டுபிடிக்கப்பட்டது. உலகின் முதல் செல்போன் கண்டுபிடிப்பாளரான மார்ட்டின் கூப்பருக்கு தற்போது வயது 93. அவர் அளித்த பேட்டி ஒன்று தான் தற்போது வைரலாகப் பேசப்பட்டு வருகிறது.
மார்டின் கூப்பரின் செல்போன் பயன்பாடு
இந்த பேட்டியில் தான் எவ்வளவு நேரம் ஸ்மார்ட்போன்களில் செலவிடுகிறேன் என்பது குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். 24 மணி நேரத்தில் 5% விழுக்காட்டிற்கும் குறைவான நேரம் தான் ஸ்மார்ட்போனுக்கு ஒதுக்குவதாக மார்ட்டின் கூப்பர் தெரிவித்துள்ளார்.
முன்னணி ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட அவர், தொகுப்பாளினி Jayne McCubbin ஒரு நாளைக்கு 5 மணிநேரம் ஸ்மார்ட்போன் பயன்படுத்துகிறார் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். அதனைத் தொடர்ந்து கூப்பர் ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு நேர்காணல் மூலம் ஆலோசனை வழங்கினார்.
PAN-Aadhaar Link: பான் உடன் ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடு முடிவு – இனி அபராதம் செலுத்த வேண்டும்!
ஸ்மார்ட்போன் பயன்பாடு குறைய வேண்டும்
போன் பயன்பாட்டைக் குறைத்து, மெய்நிகர் வாழ்க்கையை விட்டுவிட்டு நிஜ வாழ்க்கையை மக்கள் வாழ வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். கூப்பரின் கூற்றுப்படி, ஸ்மார்ட்போன் பயன்பாடு குறைக்கப்பட வேண்டும் என்பது தான் அவரது ஆசை.
Xiaomi: பெரிய டிஸ்ப்ளே ஸ்மார்ட் பேண்டை பிளாக்ஷிப் போனுடன் களமிறக்கும் சியோமி!
அதாவது, அந்த போலி உலகை தவிர்த்து வெளியே வந்தால், நிறைய உண்மையான செயல்களை மக்கள் அனுபவிக்க முடியும் என்பது அவரது எண்ணமாக உள்ளது. ஆய்வாளர்களின் கணக்கீடுகளின்படியும், இவர் கூறுவது தான் உண்மை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
மார்ட்டின் கூப்பர் உலகின் முதல் செல்போன் அழைப்பை ஏப்ரல் 3, 1973 இல் செய்தார். இந்த செல்போனை உருவாக்க மார்ட்டினுக்கு மூன்று மாதங்கள் மட்டுமே ஆனது. இந்த போன் Motorola DynaTAC 8000X ஆகும். இந்த போன் Motorola ஊழியர்களால் தயாரிக்கப்பட்டது. இதற்காக பல கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.