அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தீவிரமடைந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்பு ஒற்றைத் தலைமையை கொண்டு வர வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். ஓ பன்னீர்செல்வம் தரப்பு இரட்டைத் தலைமை தொடர வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் எடப்பாடி பழனிசாமியை கட்சியின் பொதுச் செயலாளராக நியமிப்பதற்கான ஏற்பாடுகளை அவரது ஆதரவாளர்கள் தீவிரமாக செய்துவருகின்றனர்.
கடந்த கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி பொது செயலாளர் நியமிப்பதற்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நீதிமன்றம் உத்தரவால் தீர்மானங்கள் நிறைவேற்றப்படவில்லை. ஆகையால், 11 ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகளை அவரது ஆதரவாளர்கள் தீவிரமாக செய்து வருகின்றனர். இதனுடைய அதிமுகவின் பொதுக்குழு உறுப்பினர்கள் 90% எடப்பாடி பழனிசாமி பக்கம் உள்ளனர். மேலும் மாவட்ட செயலாளர் 90 % பேரும் எடப்பாடி பழனிசாமி பக்கம் உள்ளனர்.
இந்நிலையில், ஓ பன்னீர்செல்வம் தொண்டர்களை மட்டுமே நம்பி உள்ளார். அதே நேரம் முன்னாள் நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு கோரவும் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பொறுப்பேற்றதிலிருந்து இன்று வரைக்கும் அதிமுகவிலிருந்து அவராலும், அவரது ஆதரவாளர்களாலும் ஓரங்கபட்டப்பட்ட முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், முன்னால் எம்பிக்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் பட்டியலை ஓபிஎஸ் தரப்பு தயார் செய்துள்ளது.
இந்த பட்டியலை ஓபிஎஸ் இடம் கொடுத்துள்ளனர். இந்த பட்டியலை பார்த்ததும் அவருக்கு நம்பிக்கை வந்துவிட்டதாக கூறப்படுகிறது. அந்த பட்டியில் அதிக அளவில் பெயர்கள் இடம் பெற்றுள்ளது. பட்டியலில் உள்ளவர்களை சந்தித்து ஆதரவு கோரினாலே கட்சியில் தன் பக்கம் பெரும்படை திரண்டு நிற்கும் என நினைக்கிறாராம்.
கட்சியின் அதிகாரம் தன் கைக்கு வந்துவிட்டால் நீங்கள் எதிர்பார்க்கும் புதிய பொறுப்புகளை ஓ பன்னீர்செல்வம் வழங்குவார் என்று அவரிடம் கூறி எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களை ஓபிஎஸ் பக்கம் இழுப்பதற்கான வேலைகளை ஓபிஎஸ் தரப்பினர் ஆரம்பித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.