பாகிஸ்தானில் நடைபெற்ற 3 வது சவாட் (savate) சர்வதேச குத்துசண்டை போட்டியில் வவுனியாவைச் சேர்ந்த டிலக்சினி கந்தசாமி தங்க பதக்கம் பெற்றுள்ளார்.
இவர் கோவில்குளம் இந்துக்கல்லூரியின் பழைய மாணவி ஆவார்.
தந்தையை இழந்த நிலையில் பெரும் கஷ்டத்திற்கு மத்தியிலும் தனது விடாமுயற்சியின் காரணமாக போட்டியில் கலந்துகொண்டு இலங்கைக்கும்,வட மாகாணத்திற்கும்,வவுனியாவுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
இவர் பிரதேச,மாவட்ட, மாகாண,தேசிய ரீதியில் பல பதக்கங்களை வென்றுள்ளத்துடன் , சப்ரகமுவ பல்கலைக்கழகத்திற்கு விளையாட்டு விஞ்ஞான மற்றும் முகாமைத்துவ கற்கை நெறிக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவி என்பதும் குறிப்பிடத்தக்கது
பாக்கிஸ்தானில் நடைபெற்ற 3 வது சவாட் (savate) சர்வதேச குத்துசண்டை போட்டியில் 4 ஆண்களும் 9 பெண்களும் கலந்து கொண்டதுடன் , ஒன்பது பேர் தங்க பதக்கத்தினையும் நான்கு பேர் வெள்ளி பதக்கத்தினையும் பெற்றுக் கொண்டனர்.