ஐதராபாத்: இந்தியாவில் அடுத்த 30 முதல் 40 ஆண்டுகள் பாஜகவின் காலமாக இருக்கும் என அமித்ஷா பேசியுள்ளார். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் கடந்த 2 நாட்களாக நடைபெற்ற நிலையில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜகவின் தேசிய தலைவர் ஜேபி நட்டா,மற்றும் மத்திய அமைச்சர்கள், பாஜக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இது தொடர்பாக,தேசிய செயற்குழு கூட்டத்தில் பேசிய அமித்ஷா: இந்தியாவில் அடுத்த 30 முதல் 40 ஆண்டுகள் பாஜகவின் காலமாக இருக்கும். அந்த வகையில், தென்னிந்தியாதான் பாஜகவின் அடுத்தக்கட்ட இலக்கு. குறிப்பாக, தமிழகம், ஆந்திரா, கேரளா, ஒடிசா போன்ற மாநிலங்களில் பாஜக விரைவில் ஆட்சிக்கு ஆட்சி அமைக்கும் எனவும் அவர் கூறினார்.