பற்றி எரியும் ரஷ்ய தலைநகர் மாஸ்கோ: தீயை கட்டுப்படுத்த வீரர்கள் போராட்டம்: வீடியோ காட்சிகள்!


ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள வானளாவிய மூலதன கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், அது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யா உக்ரைன் இடையிலான போர் நடவடிக்கையால் உலகளாவிய அளவில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதுடன் மட்டும் இல்லாமல் உணவுப் பொருள்களின் தட்டுப்பாடும் அதிகரித்து உலக மக்களை கடுமையாக அச்சுறுத்தி வருகிறது.

இருப்பினும் ரஷ்ய ஆதரவாளர் அதிகமாக வசிக்கும் கிழக்கு உக்ரைனிய பகுதிகளை உக்ரைனிடம் இருந்து முழுமையாக விடுவிக்கும் வரை போர் நடவடிக்கை தொடரும் எனத் தெரிவித்து, ரஷ்ய போர் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்தநிலையில், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள வானளாவிய மூலதன கட்டிடம் ஒன்றில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

சுமார் 66 தளங்களை கொண்ட இந்த வானளாவிய கட்டிடம், கடந்த ஆண்டே கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

இந்த தீவிபத்தை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில், விபத்து குறித்த எத்தகைய தகவலும் இதுவரை முழுமையாக தெரியவில்லை.

இதுத் தொடர்பாக ரஷ்யாவின் அவசரகால அமைச்சகம் தெரிவித்துள்ள தகவலில், தீயணைப்பு குழு விபத்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளது.

பற்றி எரியும் ரஷ்ய தலைநகர் மாஸ்கோ: தீயை கட்டுப்படுத்த வீரர்கள் போராட்டம்: வீடியோ காட்சிகள்! | Fire Accident At Capital Tower In Moscow Russia

கூடுதல் செய்திகளுக்கு: பிரித்தானியாவின் டவர்-பிளாக் கட்டிடத்தில் பயங்கர தீவிபத்து: பதறவைக்கும் வீடியோ காட்சிகள்!

தீவிபத்து சம்பவம் குறித்து ரஷ்யாவின் செய்தி நிறுவனமான TASS வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தீயணைப்பு குழுக்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்னதாகவே தீ கட்டுக்குள் வந்துவிட்டதாகவும், அதன் அடுக்குகளில் மட்டுமே தீ எரிந்து கொண்டு இருந்தாகவும் தெரிவித்துள்ளது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.