ஊழியர்களின் திறன் அதிகரிக்க பிளிப்கார்ட் என்னென்ன செய்றாங்க பாருங்க!

உலகின் முன்னணி இகாமர்ஸ் நிறுவனங்களில் ஒன்றாக பிளிப்கார்ட் விளங்கி வருகிறது என்பதும் அந்நிறுவனத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிளிப்கார்ட் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு டிஜிட்டல் மற்றும் வேலையில் பயிற்சி ஆகியவற்றை வழங்குவதற்காக KSDC உடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி 15 நாட்கள் டிஜிட்டல் வகுப்பு பயிற்சி மற்றும் 45 நாட்கள் வேலையில் பயிற்சி ஆகியவை வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

மகா பிரபு நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா… பிளிப்கார்ட்-ன் புதிய சேவை..!

பிளிப்கார்ட்

பிளிப்கார்ட்

கடந்த சில ஆண்டுகளாக உலகம் முழுவதும் இ-காமர்ஸ் நிறுவனங்களிடம் பொருள்களை வாங்குவதில் பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார்கள். அந்த வகையில் அமேசான், ஃப்ளிப்கார்ட் உள்பட ஒரு சில நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் ஆன்லைனில் கோடிக்கணக்கில் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது.

இந்தியாவில் பிளிப்கார்ட்

இந்தியாவில் பிளிப்கார்ட்

குறிப்பாக இந்தியாவில் பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு மிகப்பெரிய அளவில் வாடிக்கையாளர்கள் உள்ளனர் என்பதும் கோடிக்கணக்கில் தினமும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஊழியர்களுக்கு பயிற்சி
 

ஊழியர்களுக்கு பயிற்சி

இந்த நிலையில் வணிகம் பெருக பெருக ஊழியர்களின் திறன் அதிகரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பிளிப்கார்ட் நிறுவனம் பல்வேறு பயிற்சிகளை தனது ஊழியர்களுக்கு அளித்து வருகிறது. அந்த வகையில் KSDC உடன் அதாவது கர்நாடக திறன் மேம்பாட்டு கழக நிறுவனத்திடம் 15 நாட்கள் டிஜிட்டல் வகுப்பறை பயிற்சி மற்றும் 45 நாட்கள் வேலையில் பயிற்சி பெறுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

ஊழியர்களின் செயல்பாடுகள்

ஊழியர்களின் செயல்பாடுகள்

இந்த முயற்சி காரணமாக பிளிப்கார்ட் நிறுவனத்தின் ஊழியர்களின் செயல்பாடுகள் அதிகரிக்கும் என்றும் தொழில்பயிற்சி அறிவு பெறுவதற்கு உதவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

திறன் மேம்பாடு

திறன் மேம்பாடு

இதுகுறித்து கர்நாடக திறன் மேம்பாட்டு கழகத்தின் நிர்வாக இயக்குனர் அஸ்வின் கவுடா அவர்கள் கூறியபோது, ‘ முறையான வேலைவாய்ப்பைப் பெறுவதற்கு திறன் மேம்பாடு மற்றும் அதற்கான சான்றிதழ் இரண்டும் அவசியம். இந்தியாவில் லாஜிஸ்டிக்ஸ் தொழில், நாட்டின் முக்கிய முதலாளிகளில் ஒன்றாக வளர்ந்து வருகிறது. ஆனால் வளர்ந்து வரும் தேவையை பூர்த்தி செய்ய திறமையான மனிதவள பற்றாக்குறையை எதிர்கொள்கிறது’ என்று கூறியுள்ளார்.

பயிற்சிகள் அவசியம்

பயிற்சிகள் அவசியம்

இதுகுறித்து பிளிப்கார்ட் நிறுவனத்தின் தலைமை மக்கள் அதிகாரி கிருஷ்ண ராகவன் அவர்கள் கூறியபோது, ‘தொழில்துறையின் முதுகெலும்பாக விளங்கும் இ-காமர்ஸ் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை மேம்படுத்த இதுபோன்ற பயிற்சிகள் அவசியம் என்றார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Flipkart signs MoU with KSDC to provide operations training for their staffs

Flipkart signs MoU with KSDC to provide operations training for their staffs | ஊழியர்களின் திறன் அதிகரிக்க பிளிப்கார்ட் என்னென்ன செய்றாங்க பாருங்க!

Story first published: Monday, July 4, 2022, 16:42 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.