தனியர்கள் ஜாமர் கருவிகளைபயன்படுத்துவது சட்ட விரோதம்! மத்திய தகவல்தொடர்புதுறை எச்சரிக்கை…

டெல்லி: ‘தனியார் நிறுவனங்கள், தனிநபர்கள் செல்லுலார் சிக்னல்களை மறிக்கும் ஜாமர்களை பயன்படுத்துவது சட்டவிரோதமானது’ என தகவல் தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. வழிகாட்டுதல்களின் கீழ் அனுமதிக்கப்பட்டதைத் தவிர, இந்தியாவில் சிக்னல் நெரிசல் சாதனங்களை விளம்பரப்படுத்துவது, விற்பனை செய்வது, விநியோகிப்பது, இறக்குமதி செய்வது அல்லது சந்தைப்படுத்துவது சட்ட விரோதமானது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய தொலைத் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசின் அனுமதியில்லாமல், செல்போன் தகவல் தொடர்புகளை செயலிழக்கச் செய்யும் ஜாமர் கருவிகள், ஜிபிஎஸ் பிளாக்கர் மற்றும் இதர செயலிழப்பு செய்யக்கூடிய கருவிகளை தனியார் பயன்படுத்துவது சட்ட விரோதமானது .

இந்தியாவில் தகவல் தொடர்பை செயலிழக்கச்செய்யும் கருவிகளை தனியார் நிறுவனங்கள் அல்லது தனிநபர்கள் கொள்முதல் செய்யமுடியாது.  இதுகுறித்து விளம்பரம் செய்வது, விற்பனை, விநியோகம் மற்றும் இறக்குமதி செய்வதும் சட்டவிரோதம்.

சிக்னல் சமிக்ஞை பூஸ்டர்களைப் பொருத்தவரை, உரிமம் பெறப்பட்ட தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களைத் தவிர இதர நிறுவனங்களோ அல்லது தனிநபரோ செல்பேசி சமிக்ஞை பூஸ்டர்களை வாங்குவதும், விற்பதும் சட்டவிரோதமானது.

கம்பியில்லா ஜாமர்களை தங்களது இணையவழி தளத்தில் விற்பனை செய்யக்கூடாது

உள்பட பல்வேறு வழிகாட்டுதல்களை  வெளியிட்டு, அனைத்து மின்னணு வர்த்தக நிறுவனங்களுக்கும் தொலைத்தொடர்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.