விராட் கோலியுடன் நடைபெற்ற வாக்குவாதம்… ஜானி பேர்ஸ்டோ அளித்த வியக்க வைக்கும் பதில்



 எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வரும் 5வது டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பேர்ஸ்டோவிக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், அதுத் தொடர்பான விளக்கத்தை பேர்ஸ்டோ தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, மாற்றியமைக்கப்பட்ட 5வது டெஸ்ட் போட்டி மற்றும் , 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது.

இதில் தற்பொது எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வரும் மாற்றியமைக்கப்பட்ட 5வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்தியா 416 ஓட்டங்களும், இங்கிலாந்து 284 ஓட்டங்களும் எடுத்தன.

இந்திய அணி 257 ஓட்டங்கள் முன்னிலையில் நான்காவது நாள் ஆட்டத்தை தொடங்கி தற்போது 330 ஓட்டங்கள் முன்னிலையில் விளையாடி வருகிறது.

இந்த போட்டியில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த போது, அந்த அணியின் வீரர் பேர்ஸ்டோவிற்கும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது, இருப்பினும் அடுத்த சில நிமிடங்களிலேயே இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்.

வாக்குவாதத்திற்கு முன்புவரை வெறும் 61 பந்துகளில் 13 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து இருந்த பேர்ஸ்டோ அதன்பிறகு 79 பந்துகளில் 93 ஓட்டங்கள் குவித்தார்.

விராட் கோலி ஸ்லெட்ஜ் செய்ததே இந்த வாக்குவாதத்திற்கு காரணம் என சொல்லப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மூன்றாம் நாள் ஆட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த பேர்ஸ்டோவிடம் கோலியுடன் நடைபெற்ற வாக்குவாதம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த பேர்ஸ்டோ, நாங்கள் இருவரும் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் எதிர்த்து விளையாடி வருகிறோம். வெற்றிகாக களத்தில் நாங்கள் கடுமையாக போட்டியிடுகிறோம். இருவருக்குமே அவரவர் சார்ந்த அணியினை வெற்றிப் பெறச் செய்ய வேண்டுமென்பது தான் விருப்பம்.

இதுவும் அந்த வகையிலான போட்டி தான். நாங்கள் விளையாடுவது டெஸ்ட் கிரிக்கெட், இதில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவது தான் எங்களது நோக்கம். இவை எல்லாம் விளையாட்டின் ஒற்றைப் பகுதி. இது அந்த ஆட்டத்துடன் மூட்டை கட்டி வைக்கப்படும் என தெரிவித்தார்.

கூடுதல் செய்திகளுக்கு: மனைவியிடம் நகைச்சுவை செய்து சிரித்த கணவருக்கு…அடுத்த 10 நிமிடத்தில் நடந்த பரிதாபம்!

பேர்ஸ்டோவின் இந்த பதில் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.