குடிபோதையில் ஸ்வீட் கடையில் ரகளை செய்த இளைஞர்கள்.. பக்கோடாவிற்கு பணம் கேட்ட உரிமையாளருக்கு அடி, உதை..!

சென்னை புது வண்ணாரப்பேட்டையில் குடிபோதையில் ஸ்வீட் கடைக்குள் புகுந்த இளைஞர்கள் சாப்பிட்ட பகோடா-விற்கு பணம் கேட்ட உரிமையாளரை தாக்கினர்.

காளிமுத்து என்பவரின் கடைக்கு குடிபோதையில் வந்த 2 பேர் அங்கிருந்த பக்கோடா-வை எடுத்து சாப்பிட்டுள்ளனர்.

பணம் கொடுத்து பக்கோடா வாங்கி கொள்ளுமாறு காளிமுத்து கூறியதால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் அவரை டிரேயால் தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றனர்.

இடது கண் அருகே ரத்தம் வழிந்த போதும் வலியை பொருட்படுத்தாத ஸ்வீட் கடை உரிமையாளர், இருவரில் ஒருவனை பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.