இந்தியாவிலேயே மிக முக்கியமான வர்த்தக மாநிலமாக விளங்கும் தமிழ்நாடு கல்வி முதல் வேலைவாய்ப்பு வரையில் பல விஷயத்தில் இந்தியாவின் சராசரி அளவை காட்டிலும் முன்னோடியாக இருக்கிறது.
இந்நிலையில் 2030 ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை 1 டிரில்லியன் டாலர் அதாவது 1 லட்சம் கோடி டாலர் மதிப்பிலான பொருளாதார மதிப்பீட்டைக் கொண்ட மாநிலமாக உயர்த்த வேண்டும் என்ற முக்கியமான இலக்கை கொண்டு உள்ளது.
இந்த மாபெரும் இலக்கை அடையத் தமிழ்நாட்டில் தொடர்ந்து புதிய நிறுவனங்களை ஈர்த்து, 1 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடையும் பணியில் முக்கியமானதாக இன்று சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த முதலீட்டு மாநாடு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு: ஓரே நாளில் ரூ.1.25 லட்சம் கோடி முதலீடு.. 11 பின்டெக் நிறுவனங்கள் உடன் சிறப்பு ஒப்பந்தம்!
முக ஸ்டாலின்
இன்று சென்னையில் முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் நடந்த முதலீட்டு மாநாட்டில் ஏற்கனவே தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்த 12 நிறுவனங்கள் இன்று முதல் இயங்க துவங்கியது. இந்த 12 நிறுவனங்கள் 1,497 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டில் சுமார் 7,050 வேலைவாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளது.
60 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
இன்றைய கூட்டத்தில் பல துறையைச் சேர்ந்த சுமார் 60 நிறுவனங்களுடன் தமிழக அரசு புதிதாகப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டு உள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம் சுமார் 1.25 லட்சம் கோடி ரூபாய் அளவிலான முதலீடுகள் தமிழ்நாட்டுக்கு வர உள்ளது. இதன் வாயிலாக 74,898 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடிக்கல் நாட்டப்பட்டது
இதேபோல் 22,252 கோடி ரூபாய் முதலீட்டில் துவங்கப்படும் 21 நிறுவனங்கள் வர்த்தகத் திட்டத்திற்கான தொழிற்சாலை மற்றும் அலுவலகங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளது. இந்த 21 நிறுவனங்கள் மூலம் சுமார் 17,654 வேலைவாய்ப்புகள் கிடைக்க உள்ளது.
5 புதிய திட்டங்கள்
இதைத் தாண்டி 5 புதிய திட்டங்களைத் தமிழ்நாடு இன்று துவங்கி வைத்துள்ளது.
1. தமிழ்நாடு லைப் சையின்ஸ் பாலிசி 2022
2. தமிழ்நாடு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கொள்கை 2022
3. TN PitchFest
4. TN Tecxperience Portal – டிஜிட்டல் சேவை பயன்பாட்டை ஊக்குவிக்க
5. TN – இன்போசிஸ் ஸ்பிரிங் போர்டு – புதிய & வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் மாணவர்கள் பயிற்சி பெறும் தளம் 5000 course உள்ளது
பின்டெக் ஹப்
தமிழ்நாட்டை நிதியியல் சார்ந்த டெக் சேவைகளை அளிக்கும் தளமாகத் தமிழ்நாடு மாநிலம் மாற வேண்டும் 11 பின்டெக் நிறுவனங்களுடன் தமிழ்நாடு அரசு இன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்துள்ளது.
இதில் மாஸ்டர்கார்டு, போன்பே, PayU உட்பட 11 நிறுவனங்கள் உள்ளது.
சிறந்த மாநிலம் – தமிழ்நாடு
தமிழ்நாட்டில் திமுகக் கட்சி பொறுப்பேற்று இதுவரை சுமார் 192 நிறுவனங்கள் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த 192 ஒப்பந்தம் மூலம் சுமார் 2.20 லட்சம் கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைத் தமிழ்நாடு பெற்றுள்ளது என முதல்வர் முக ஸ்டாலின் முதலீட்டு மாநாட்டில் பேசினார்.
TamilNadu Investment Concave july 4 2022: Important things to know.. What are the benefits
TamilNadu Investment Concave July 4 2022: Important things to know.. What are the benefits தமிழ்நாடு முதலீட்டு மாநாடு.. மக்கள் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன..?