மத்திய அரசின் ஒற்றை முடிவு.. முகேஷ் அம்பானிக்கு எவ்வளவு நஷ்டம் தெரியுமா?

கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து கச்சா எண்ணெய் விலையானது தொடர்ந்து உச்சம் தொட்டு வருகின்றது. இதனால் இந்தியாவினை சேர்ந்த உற்பத்தியாளர்களும் ஏற்றுமதி மூலம் நல்ல லாபம் பார்த்து வந்தனர்.

ஏனெனில் உள்நாட்டு கச்சா எண்ணெய் உற்பத்தியாளர்கள், சர்வதேச விலைக்கு ஏற்ப விற்பனை செய்து வருகின்றனர்.

இதனால் தான் உள்நாட்டு கச்சா எண்ணெய் உற்பத்தியாளர்கள் அதிகளவில் லாபம் ஈட்டி வந்தனர். இதனைக் கருத்தில் கொண்டு தான் கச்சா எண்ணெய் மீது டன்னுக்கு ரூ.23,250 கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்க்கு இந்த கூடுதல் செஸ் வரி விதிக்கப்படாது.

கச்சா எண்ணெய் வரி எப்போது குறையும்.. தருண் பஜாஜ் வைக்கும் ட்விஸ்ட பாருங்க!

மார்ஜின் சரியலாம்

மார்ஜின் சரியலாம்

மத்திய அரசின் இந்த நடவடிக்கையினால் கச்சா எண்ணெய் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஓ என் ஜி சி, நயாரா எனர்ஜி, ஆயில் இந்தியா லிமிடெட் என பல நிறுவனங்களும் வருவாயில் பலத்த சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நிறுவனங்களின் மார்ஜின் விகிதத்தினை பாதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசுக்கு வருவாய் அதிகரிக்கும்

அரசுக்கு வருவாய் அதிகரிக்கும்

மத்திய அரசின் இந்த நடவடிக்கையினால் அரசுக்கு கூடுதலாக 1.3 லட்சம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதே நேரம் எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களின் மார்ஜின் விகிதம் கடும் சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூடுதல் வரி
 

கூடுதல் வரி

கடந்த ஜூலை 1 முதல் தங்கம் மீதான இறக்குமதி வரியில் 5% அதிகரிப்பும், பெட்ரோல் மற்றும் ஏடிஎஃப் ஏற்றுமதிக்கு வரி விகிதம் லிட்டருக்கு 6 ரூபாயும், டீசலுக்கு லிட்டருக்கு 13 ரூபாயும் விதிக்கப்பட்டுள்ளது. அதோடு உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு டன்னுக்கு 23,150 ரூபாய் கூடுதல் வரியாக (windfall tax) விதிக்கப்பட்டுள்ளது.

இது தான் காரணமோ?

இது தான் காரணமோ?

ஹெச்எஸ்பிசி குளோபல் ரிசர்ச், மே 2022ல் பெட்ரோலுக்கு லிட்டருக்கு 8 ரூபாயும், டீசலுக்கு 6 ரூபாய் வரியும் கலால் வரியினை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் அரசுக்கு வருவாய் 1 லட்சம் கோடி ரூபாய் வருவாய் சரிவினைக் கண்டுள்ளது.

இதற்கிடையில் தான் இந்த இழப்பினை ஈடுகட்டும் விதமாக ஜூலை 1 முதல் அரசு கூடுதல் வரியினை அதிகரித்து. இது அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பினை ஈடுகட்டும் விதமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எவ்வளவு தாக்கம்

எவ்வளவு தாக்கம்

கோல்டுமேன் சாச்சஸ் ஆய்வு நிறுவனம் அதன் வருவாயில் தாக்கத்தினை எதிர்கொள்ளலாம். இதன் மூலம் பேரலுக்கு 12.7 டாலர் மார்ஜினில் தாக்கம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே வரையறுக்கப்பட்ட வருவாய் ஆபத்தினை காணலாம் என கூறியுள்ளது.

ஆய்வு நிறுவனங்கள் கணிப்பு

ஆய்வு நிறுவனங்கள் கணிப்பு

மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் ரிலையன்ஸின் GRM பேரலுக்கு 5 – 6 டாலர்கள் சரிவினைக் காணலாம் என CLSA தெரிவித்துள்ளது. இதே போல கிரெடிட் சூசி நிறுவனம் பேரலுக்கு 7- 8 டாலர்கள் தாக்கம் இருக்கலாம் எனறும், இது அதன் எபிடா விகிதத்தில் 3.5 – 4 டாலர்களாக இருக்கலாம் என கணித்துள்ளது.

மொத்தத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட எண்ணெய் உற்பத்தியாளர்களின் வருவாய் சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Windfall tax decision of the central government may have an impact on the margin

Windfall tax decision of the central government may have an impact on the margin/மத்திய அரசின் ஒன்றை முடிவு.. முகேஷ் அம்பானிக்கு எவ்வளவு நஷ்டம் தெரியுமா?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.