விஜயவாடா: பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் கருப்பு பலூன்களை பறக்கவிட்டு போராட்டம் நடத்தினர். அந்த பலூன்கள் பிரதமரின் ஹெலிகாப்டரை நெருங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆந்திர மாநிலம் பீமாவரத்தில், விடுதலைப் போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜூவின் 125வது பிறந்தநாளின் ஓராண்டு கால விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு 30 அடி உயர வெண்கல சிலையை அவர் திறந்து வைத்தார். பின்னர் அவர் விஜயவாடாவில் இருந்து ஹெலிகாப்டரில் கிளம்பினார்.
பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் கருப்பு பலூன்களை பறக்கவிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது காங்கிரசார் பறக்கவிட்ட பலூன்கள் நடுவானில் பிரதமர் மோடி இருந்த ஹெலிகாப்டரை நெருங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
விஜயவாடா: பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் கருப்பு பலூன்களை பறக்கவிட்டு போராட்டம் நடத்தினர். அந்த பலூன்கள் பிரதமரின் ஹெலிகாப்டரை நெருங்கியதால்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.