கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.9,424 கோடி மதிப்பீடு தயார்! சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்

கோவை: கோயமுத்தூரில்  மெட்ரோ ரயில் திட்டத்தை அமல்படுத்த தமிழகஅரசு முயற்சி எடுத்து வருகிறது. அதுதொடர்பாக,  ரூ.9,424 கோடி மதிப்பீட்டில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, தயார் நிலையில் உள்ளதாக  சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவரப்படும் என கடந்த அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டு, திமுக ஆட்சியில் நடைமுறைப்படுத்து வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 2021ம் ஆண்டு அப்போதைய அதிமுக நிதிஅமைச்சராக இருந்த ஓபிஎஸ், தமிழக சட்டமன்றத்தில் 2021-22: 2000க்கு இடைக்கல பட்ஜெட்டில், கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.6683 கோடி ஒதுக்கீடு… செய்யப்படுவதாக அறிவித்தார்.

அதைத்தொடர்ந்து நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்து, திமுக அரசு பதவி ஏற்றதும், கோவை மெட்ரோ பணிகளை தீவிரப்படுத்தியது. திமுக  2021ம் ஆண்டு தாக்கல் செய்த பட்ஜெட்டில், மதுரை, கோவையில்  மெட்ரோ ரயில் திட்டத்தை அமைப்பதற்கான விரிவான சாத்தியக் கூறு அறிக்கைகள் தயார் செய்யப்படும். கோவை மாவட்டத்தை பொறுத்தவரை மெட்ரோ ரயில் சேவை தொடங்குவது தொடர்பாக மத்திய அரசிடம் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, நடப்பு ஆண்டு (2022) ஏப்ரல் மாதத்தில்  தமிழகஅரசு அதற்காக நடத்தப்பட்ட ஆய்வு அறிக்கையை வெளியிட்டது. அதன்படி, மெட்ரோ ரயில் சேவை செயல்பாட்டுக்கு வரும்போது நாள் ஒன்றுக்கு 3.71 லட்சம் பேர் பயணம் செய்வார்கள் என்று தெரிவித்தது.

இந்த நிலையில், கோவை மெட்ரோரயில் நிலையம் குறித்து சமூக ஆர்வலர் தயானந்த் கிருஷ்ணன் தகவல் உரிமைபெறும் சட்டத்தின்கீழ் கேள்வி எழுப்பி உள்ளார். அதற்கு சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் பதில் அளித்துள்ளது.

அதில்,  கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.9,424 கோடி மதிப்பீடு செய்யப்பட்டிருப்பதாக  தெரிவித்துள்ளது.  கோவையில் மொத்தம் 139 கி.மீ. தூரத்துக்கு 3 கட்டங்களாக மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. முதல்கட்டமாக அவிநாசி சாலையில் கருமத்தம்பட்டி வரையிலும், உக்கடத்தில் இருந்து சத்தியமங்கலம் சாலையில் வலியம்பாளையம் பிரிவு வரையிலும் 44 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

விரிவான ஆய்வு, ஒப்புதல்களுக்குப் பிறகு 2-ம் கட்டம் மற்றும் 3-ம் கட்டப் பணிகள் தொடங்க உள்ளன. தற்போது உள்ள 139 கி.மீ. திட்டத்தில் இருந்து மேலும் நீட்டிப்பு மற்றும் புதிய பகுதிகளைச் சேர்ப்பதற்கான பரிந்துரைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட உள்ளது.

கோவையில் முக்கிய சாலைகளில் மேம்பாலங்கள் கட்டப்படும் இடங்களுக்கு இணையாக மெட்ரோ ரயில் தடம் அமைய உள்ளது. அதற்குத் தேவையான நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. போதுமான வாகன நிறுத்துமிட வசதி, எஸ்கலேட்டர்கள், லிப்ட் வசதி, ஏற்கெனவே உள்ள சாலையைக் கடப்பதற்கு இடவசதி உள்ள இடங்களில் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.

விமான நிலையம், ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள், பெரிய நிறுவனங்கள், வணிக வளாகங்கள் போன்ற இடங்களில் பொது, தனியார் பங்களிப்பின் கீழ் மெட்ரோ ரயில் நிலையங்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.9,424 கோடி மதிப்பீடு செய்திருப்பதாகவும், 2027-ம் ஆண்டில் பணிகள் நிறைவடையும் என்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் (ஆர்டிஐ) தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவையில் அமைக்கப்பட உள்ள மெட்ரோ ரயில் ஆய்வு அறிக்கை வெளியீடு…

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.