உக்ரைன் போர் அடுத்த ஆண்டு நிறைவடையும் என உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைவர் Kirill Budanov தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தாக்குதல் 131வது நாளாக நடைபெற்று வரும் நிலையில், கிழக்கு உக்ரைனிய பகுதிகளில் ரஷ்ய படைகள் மிக நிதானமாக முன்னேறி வருகின்றனர்.
உக்ரைனிய வீரர்களின் தொடர்ச்சியான தடுப்பு தாக்குதலே ரஷ்ய படைகளின் நிதானத்திற்கு காரணம் என சொல்லப்பட்டாலும், ரஷ்ய படைகளின் ஆயுதப் பற்றாக்குறையும் மற்றும் படைவீரர்களின் பற்றாக்குறையுமே முக்கிய காரணம் என உக்ரைன் தெரிவித்து வருகிறது.
The war in #Ukraine will end next year, the head of the #Ukrainian Defense Ministry’s GUR Kirill Budanov said.
Budanov stressed that he would consider the end of the war precisely as “reaching the borders as of 1991”. No other scenarios are considered. pic.twitter.com/NC7om5l8RT
— NEXTA (@nexta_tv) July 4, 2022
கிட்டத்தட்ட ஐந்து மாதமாக தொடரும் இந்த போர் நடவடிக்கையில் உக்ரைனுக்கு ஆதரவாக பல்வேறு மேற்கத்திய நாடுகளும் ஆயுத உதவிகளை வழங்கி வரும் நிலையில், ரஷ்யாவின் இந்த போர் முன்னெடுப்புகள் முடிவில்லா நிலையை அடைந்துள்ளது.
இந்தநிலையில், உக்ரைன் போர் அடுத்த ஆண்டு முடிவடையும் என உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைவர் Kirill Budanov தெரிவித்துள்ளார்.
இதுத் தொடர்பாக அவர் தெரிவித்துள்ள தகவலில், உக்ரைன் போர் துல்லியமாக எப்போது நிறைவடையும் என்று சொல்லவேண்டும் என்றால், 1991 ஆம் ஆண்டின் பிராந்திய எல்லை நிலைகளை உக்ரைன் அடையும் போது நிறைவடையும் எனத் தெரிவித்துள்ளார்.
மற்றப்படி வேறு எந்த நிகழ்வுகளும் கருத்தில் கொள்ளப்படாது எனவும் தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு; வணிக வளாகத்தில் துப்பாக்கியுடன் நுழைந்த மன நோயாளி: டென்மார்க்கில் அரங்கேறிய பயங்கர சம்பவம்!
விராட் கோலியுடன் நடைபெற்ற வாக்குவாதம்… ஜானி பேர்ஸ்டோ அளித்த வியக்க வைக்கும் பதில்
உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் ஆயுதம் தொடர்ந்து வழங்குவதால் நீண்ட கால போருக்கு உக்ரைனால் தயாராக முடியும், ஆனால் ரஷ்யாவிற்கு தற்போதே கடுமையான ஆயுதப் பற்றாக்குறையும் மனித பற்றாக்குறையும் ஏற்பட்டுவிட்டதால் ரஷ்யாவால் நீண்ட கால போரை தாங்க முடியாது என கருத்துகள் வெளியாகி வருகின்றன.