தமிழ்நாட்டில் இன்று புதிதாக 2654 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் 1066, செங்கல்பட்டில் 375, திருவள்ளூரில் 135 மற்றும் காஞ்சிபுரத்தில் 79 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது.
கோவை 144, திருச்சி 102, திருநெல்வேலி 86, கன்னியாகுமரி 78, தூத்துக்குடி 71, மதுரை 51,
விருதுநகர் 50, சேலம் 40, ராணிப்பேட்டை 37, தென்காசி33, ஈரோடு 30, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரத்தில் தலா 26 பேருக்கும், நாமக்கல் 24, திருப்பூரில் 20 பேருக்கும்,
கிருஷ்ணகிரி 19, பெரம்பலூர் 18, தஞ்சாவூர் 17, கடலூர் மற்றும் சிவகங்கையில் தலா 15 பேருக்கும், கள்ளக்குறிச்சி மற்றும் புதுக்கோட்டையில் தலா 11 பேருக்கும், நீலகிரி 10,
அரியலூர் 9, திண்டுக்கல் மற்றும்மற்றும் திருவாரூரில் தலா 8 பேருக்கும், தருமபுரி 7, வேலூர் 6,
ராமநாதபுரம் மற்றும் திருப்பத்தூரில் தலா 5 பேருக்கும், தேனி, நாகப்பட்டினம் மற்றும் கரூரில் தலா 4 பேருக்கும், மயிலாடுதுறை 3 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.
தவிர, ஓமான் நாட்டில் இருந்து வந்த ஒருவருக்கும் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது,
இன்று மொத்தம் 30,031 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் 1,449 ஆண்கள் 1,205 பெண்கள் என மொத்தம் 2,654 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
1,542 பேர் இன்று குணமடைந்த நிலையில் 15,616 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர்.