இலங்கையில் முற்றாக முடங்கும் அபாயத்தில் கிராமிய வைத்தியசாலைகள்


நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக கிராமிய வைத்தியசாலைகளின் பணிகள் முற்றாக தடைப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

உள்நோயாளிகளை அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்க அந்த மருத்துவமனைகளின் அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளதுடன், வெளிநோயாளர் சிகிச்சை நிலையங்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

வைத்தியசாலையின் செயற்பாடுகள் முடக்கம்

இலங்கையில் முற்றாக முடங்கும் அபாயத்தில் கிராமிய வைத்தியசாலைகள் | There Is A Risk That The Work Of Hospitals

வைத்தியசாலை ஊழியர்கள் பணிக்கு சமூகமளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளமை காரணமாகவே வைத்தியசாலையின் செயற்பாடுகள் முடங்கியுள்ளன.

எனினும் ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளை பிரதான வைத்தியசாலைகளுக்கு மாற்றுவதன் மூலம் அவர்களுக்கு தேவையான சிகிச்சை வழங்கப்படுவதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

மாத்தறை, வெலிகம பிராந்திய வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் ஊழியர்கள் எதிர்நோக்கியுள்ள எரிபொருள் பற்றாக்குறை காரணமாக வைத்தியசாலையை கடந்த 2 ஆம் திகதி முதல் மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக அங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் வீடுகள் மற்றும் ஏனைய மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

வெளிநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற வந்த நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியிருந்தனர்.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.