மீண்டும் அதிரடி ஆட்டம்.. 1973ம் ஆண்டிற்கு பின் ரிஷப் செய்த சாதனை!

ஒரே டெஸ்டில் ஒரு இன்னிங்சில் சதம் மற்றும் மற்றொரு இன்னிங்சில் அரை சதம் விளாசிய இரண்டாவது இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையை ரிஷப் பண்ட் பெற்றுள்ளார்.
பர்மிங்ஹாமில் நடைபெற்று வரும் இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் அதிரடியாக விளையாடிய பண்ட் 111 பந்துகளில் 146 ரன்களை எடுத்திருந்தார். இரண்டாவது இன்னிங்சில் அவர் அரை சதம் அடித்தார். 86 பந்துகளில் 8 பவுண்டரிகள் உதவியுடன் 57 ரன்களை குவித்த அவர் ஜேக் லீச் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இதையடுத்து இந்திய அணிக்காக ஒரே டெஸ்டில் சதமும், அரை சதமும் அடித்த விக்கெட் கீப்பர் முன்னாள் வீரர் ஃபரூக் இன்ஜினியரின் சாதனையுடன் இணைந்தார் ரிஷப் பண்ட்.
IND vs SL, 2nd Test, Day 2: Rishabh Pant Breaks Kapil Dev's 40-year-old  Record With Fastest Fifty
ஃபரூக் இன்ஜினியர் 1973ஆம் ஆண்டு இங்கிலாந்திற்கு எதிராக மும்பையில் நடைபெற்ற போட்டியில் முதல் இன்னிங்சில் 121 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் 66 ரன்களும் குவித்திருந்தார். 49 ஆண்டுகளுக்கு பிறகு அந்த சாதனையுடன் தனது பெயரையும் இணைத்திருக்கிறார் ரிஷப் பண்ட். இதில் ஒரு சுவாரஸ்யம் என்னவென்றால் இந்த இரு விக்கெட் கீப்பர்களின் சாதனைகளும் இங்கிலாந்து அணிக்கு எதிராக நிகழ்த்தப்பட்டவை என்பதாகும்.
rishabh: Rishabh Pant breaks Kapil Dev's record of fastest Test fifty by an  Indian - The Economic Times
தகர்ந்த 72 ஆண்டு கால சாதனை:
ரிஷப் பண்ட் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் அதிக ரன்கள் குவித்த வெளிநாட்டு விக்கெட் கீப்பர் என்ற சாதனையை முறியடித்தார். லார்ட்ஸில் இங்கிலாந்துக்கு எதிராக 1950 ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளுக்காக கிளைட் வால்காட்டின் சாதனையை ரிஷப் பண்ட் தகர்த்தெறிந்தார். முன்பு வால்காட் 14 மற்றும் 168 ரன்களை எடுத்திருந்தது 72 ஆண்டுகளாக முறியடிக்கப்படாமல் இருந்தது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.