அந்தமான் அருகே அடுத்தடுத்து நில அதிர்வுகள் உணரப்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
காலை 11 மணி அளவில் ரிக்டர் அளவுகோலில் 4 புள்ளி 4ஆக நில அதிர்வு உணரப்பட்டதை அடுத்து, பிற்பகல் வேளையிலும் 4 புள்ளி 6 என்ற அளவில் அதிர்வு பதிவாகியது.
அந்தமான் தீவுகளில் இருந்து 205 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நில அதிர்வுகள் ஏற்பட்டதாக நிலநடுக்கவியல் மையம் குறிப்பிட்டுள்ளது. நில அதிர்வால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பாக தகவல்கள் வெளியாகவில்லை.