ட்விட்டர் நிறுவனத்தின் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தலைமை நிர்வாக அதிகாரி (CEO) பராக் அகர்வால் சமீபத்தில் தனது ஊழியர்களுக்கு காபி பரிமாறியுள்ளார். அந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
கடந்த வாரம், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் ஒரு சில வணிக நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக பிரித்தனையாவுக்கு சென்றிருந்தார்.
அதில் ஒரு நிகழ்வின் போது, அவர் தனது ஊழியர்களிடமிருந்து காபி ஆர்டர்களைப் பெற்று அவர்களுக்கு பரிமாறினார். அவருடன் இங்கிலாந்தின் ட்விட்டரின் நிர்வாக இயக்குநர் தாரா நாசர் (Dara Nasar) மற்றும் CFO நெட் செகல் (Ned Segal) ஆகியோரும் இருந்தனர்.
நெட் செகல் குக்கீஸ் வழங்கிய புகைப்படமும் வெளியானது.
அகர்வால் காபி ஆர்டர் எடுக்கும் படங்கள் உடனடியாக இணையத்தில் வெளிவந்தன. சேகலும் ட்விட்டரில் ஒரு செல்ஃபியைப் பகிர்ந்துள்ளார், அங்கு அகர்வால் ஊழியர்களிடமிருந்து ஆர்டர்களைப் பெறுவதைக் காணலாம்.
இந்திய இளம்பெண்ணிற்கு கனடாவில் இருந்து கிடைத்த கோடிக்கணக்கான பணம்! சுவாரசிய தகவல்
இது மட்டுமல்லாமல், ஊழியர்களை மகிழ்விப்பதற்காக அகர்வால் தாரா நாசருடன் இணைந்து சிறிய நிகழ்வையும் (Stand -up Act) நடத்தினார். நிகழ்வின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன.
வெளிநாட்டில் உள்ள இந்திய தூதரகத்தில் இந்திய இளைஞர் தற்கொலை..
ட்விட்டரின் நிறுவனர் ஜாக் டோர்சி நிறுவனத்தை விட்டு வெளியேறிய பிறகு, நவம்பர் 2021-ல் அகர்வால் நிறுவனத்தின் கட்டுப்பாட்டை எடுத்துக் கொண்டார்.
[ANCE8J