‘வளர்ச்சியும் இந்துத்வாவும் எங்கள் நோக்கம்’: ஏக்நாத் ஷிண்டே பிரகடனம்

‘While in MVA, couldn’t laud Savarkar’: Eknath Shinde says development, Hindutva on his govt’s agenda: 288 உறுப்பினர்களை கொண்ட மகாராஷ்டிராவில் சிவசேனா-பா.ஜ.க அரசு 164 வாக்குகள் பெரும்பான்மையுடன் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற நிலையில், புதிய ஆட்சியின் நோக்கத்தில் வளர்ச்சியும் இந்துத்துவாவும் இருப்பதாக முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறினார்.

சட்டசபையில் பேசிய ஏக்நாத் ஷிண்டே, 2019 மாநிலத் தேர்தலுக்குப் பிந்தைய காலகட்டத்தை நினைவு கூர்ந்தார், மேலும் தேர்தலின் போது அவர் நடத்தப்பட்ட விதம் குறித்து மிகவும் வருத்தமடைந்ததாகக் கூறினார்.

இதையும் படியுங்கள்: ”நான் மீண்டும் வந்துவிட்டேன்; இப்போது என்னுடன் ஷிண்டே இருக்கிறார்” : தேவேந்திர பட்னாவிஸ் அதிரடி பேச்சு 

இவ்வளவு பெரிய சம்பவம் (கிளர்ச்சி) ஏன் நடந்தது என்பதை அவர்கள் (சிவசேனாவின் தாக்கரே பிரிவு) புரிந்து கொள்ள வேண்டும். அதற்கான மூலகாரணத்தை அவர்கள் கண்டறிய வேண்டும்” என்று கூறிய ஏக்நாத் ஷிண்டே, கட்சியைக் காப்பாற்ற “தியாகியாக” இருக்கத் தயார் என்றும் கூறினார்.

உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா பிரிவினர் தனது வீட்டைத் தாக்கியதாகவும், அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிராக தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகவும், அவர்கள் கவுகாத்தியில் முகாமிட்டிருந்தபோது அவர்களை விலங்குகளுடன் ஒப்பிட்டுப் பேசியதாகவும் ஏக்நாத் ஷிண்டே குற்றம் சாட்டினார். “ஒருபுறம் (கிளர்ச்சிக்குப் பிறகு) நீங்கள் என்னைச் சந்தித்து உரையாடல் நடத்த ஆட்களை அனுப்பினீர்கள் மறுபுறம் என்னைத் திட்டி, என் வீட்டின் மீது கற்களை வீசினீர்கள். அவர்கள் எங்களை விலங்குகளுடன் ஒப்பிட்டு, துஷ்பிரயோகம் செய்தனர், உயிருள்ள சடலம் என்று அழைத்தனர்,” என்று ஏக்நாத் ஷிண்டே கூறினார்.

மகா விகாஸ் அகாதி (எம்.வி.ஏ) என்ற பெயரில் அரசாங்கத்தை அமைத்த சிவசேனா மற்றும் காங்கிரஸின் “இயற்கைக்கு மாறான” கூட்டணியால் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை சுட்டிக்காட்டிய ஏக்நாத் ஷிண்டே, “கடந்த இரண்டரை ஆண்டுகளில் , நாங்கள் சில சிக்கல்களை எதிர்கொண்டோம். சிவசேனாவில் இருப்பதால் தாவூத் இப்ராகிமுடன் கூட்டணி வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை. நாங்கள் காங்கிரஸுடன் இருந்ததால் வீர் சாவர்க்கரைப் பாராட்ட முடியவில்லை” என்று கூறினார்.

”தனது பிரிவினர் “துரோகிகள்” என்று முத்திரை குத்தப்பட்டுள்ளனர், ஆனால் நாங்கள் துரோகிகள் இல்லை. நாங்கள் சிவ சைனிக்களாக இருந்தோம், நாங்கள் சிவ சைனிக்களாக இருக்கிறோம், தொடர்ந்து சிவ சைனிக்களாக இருப்போம்” என்று ஏக்நாத் ஷிண்டே அறிவித்தார். மேலும், “நாங்கள் மறைந்த பாலாசாஹேப் மற்றும் ஆனந்த் திகே ஆகியோரின் சைனிக்குகள். வளர்ச்சியும் இந்துத்துவாவும் எங்கள் நோக்கங்களாக உள்ளன.” எம்.வி.ஏ. கூட்டணியில் சிவ சைனியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். “சிலர் வழக்குகளை எதிர்கொண்டனர், சிலர் எஃப்.ஐ.ஆர்.,களை எதிர்கொண்டனர். அவர்கள் என்னிடம் வந்து அழுதார்கள்… நான் அவர்களுக்கு நகர்ப்புற வளர்ச்சியில் இருந்து நிதி கொடுத்தேன்,” என்றும் ஏக்நாத் ஷிண்டே கூறினார்.

“இளைஞர்களின் வாழ்க்கையை கெடுக்கும்” 16 டான்ஸ் பார்களை அழித்ததாகவும் ஏக்நாத் ஷிண்டே கூறினார். “பெண்களுக்கான 16 மதுக்கடைகளை நாசப்படுத்தியவன் நான். என் மீது நூற்றுக்கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. (இருப்பினும்) பெண்களின் மதுக்கடைகள் மூடப்பட்டிருப்பதை உறுதி செய்தேன்” என்றும் ஏக்நாத் ஷிண்டே கூறினார்.

தனது கிளர்ச்சியின் போது ஆதரவளித்த அனைத்து சிவசேனா மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ.,க்களுக்கும் ஏக்நாத் ஷிண்டே நன்றி தெரிவித்தார். இந்த 50 எம்.எல்.ஏ.,க்களை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். நாங்கள் இந்த பணியைத் தொடங்கியபோது, ​​நாம் எங்கு செல்கிறோம், எத்தனை நாட்கள் ஆகும் என்று யாரும் கேட்கவில்லை. மகாராஷ்டிரா அரசியலில் இது ஒரு வரலாற்று தருணம், ஃபட்னாவிஸ்ஜி என்னிடம் கூறியது போல், இந்த அரசியல் வளர்ச்சியை 33 நாடுகள் கவனத்தில் எடுத்துள்ளன” என்று ஏக்நாத் ஷிண்டே கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.