நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்காக, பிரதமர் தலைமையிலான அரசாங்கமொன்றை ஜனாதிபதி நியமித்துள்ள போதிலும் குறிப்பிட்ட சிலர் நாட்டை அராஜக நிலைக்கு கொண்டு செல்லும் வேலையை செய்து வருவதாக சபை முதலவரும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன இன்று (04) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அனைத்துக் கட்சித் தலைவர்களினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் இன்று (04) பாராளுமன்றம் கூடியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாடு பாரிய எரிபொருள் பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாம் அனைவரும் இந்தப் பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளோம் என்றும் அமைச்சர் தினேஷ் குணவர்தன சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, நீண்டகாலமாக பதில் அளிக்கப்படாத 50 தாமதமான கேள்விகளுக்கு பதிலளிக்கும் வாய்ப்பு இன்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது..