என்னாது ஒரு கிலோ ரூ.2.7 லட்சமா.. இது தான் ரொம்ப காஸ்ட்லியான மாம்பழம்?

ஒரு கிலோ மாம்பழத்தின் விலை 2.7 லட்சம் ரூபாயா? யம்மாடியோவ், நம்மூரில் ஒரு டன் மாழ்பழமே வாங்கலாமே? ஏன் இவ்வளவு விலை எங்கு எனலாம் . இது வேறு எங்கும் இல்லை. இந்தியாவில் விளையும் ஒரு மாழ்பழ ரகத்தின் விலை தான் இது.

இந்தியாவில் மட்டும் அல்ல, உலக நாடுகளில் ரொம்ப காஸ்ட்லியான மாம்பழமாகவும் பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு முதலீட்டு மாநாடு.. மக்கள் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன..?

மியாசாகி மாம்பழம்

மியாசாகி மாம்பழம்

ஐபிஎல் அணியின் உரிமையாளரான ஹர்ஷ் கோயங்கா, தனது ட்விட்டர் பக்கத்தில் மாழ்பழம் குறித்தான பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.

மத்திய பிரதேசத்தில் இருக்கும் ஜபல்பூர் என்ற பகுதியில் தான் இந்த மாம்பழம் விளைவிக்கப்பட்டு வருகின்றது. மியாசாகி என்று அழைக்கப்படும் இந்த மாழ்பழம் நீல நிறத்தில் காணப்படுகின்றது.

பலத்த பாதுகாப்பு

பலத்த பாதுகாப்பு

ஜப்பானை பூர்விகமாக கொண்ட இந்த மாழ்பழத்தினை பரிஹார் என்ற விவசாயி தான் ஜபல்பூர் பகுதியில் பயிரிட்டுள்ளார். இந்த 2 மரங்களை பாதுகாக்க 3 செக்யூரிட்டிகளை பணியில் அமர்த்தியுள்ளார். அதோடு 6 நாய்களையும் உடன் வைத்துள்ளார்.

பல மருத்துவ குணம்
 

பல மருத்துவ குணம்

பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட இந்த மாம்பழத்தின் விலையானது வியக்க வைக்கிறது. எனினும் அதன் பலன்களை தெரிந்து கொள்ளும்போது இதன் விலை அதிகம் இருந்தாலும் அதற்கு தகும் என்றே எண்ணத் தோன்றுகிறது. ஒரு மாம்பழம் 350 கிராம் இருக்கும் நிலையில், இது ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதங்களில் காய்க்க தொடங்குகிறது.

என்ன பலன்?

என்ன பலன்?

இதில் அதிகளவிலான ஆண்டி- ஆக்ஸிடன்ட்கள், பீட்டா கரோட்டின், போலிக் அமிலம் என பலவும் நிறைந்துள்ளது.

70களின் பிற்பகுதியிலும், 80களின் முற்பகுதியிலும் மியாசாகி மாம்பழத்தின் உற்பத்தியானது தொடங்கியதாக கூறப்படுகிறது.இங்கு அதிக வெப்பம், அதிக நேர சூரிய ஓளி உள்ளிட்ட பல காரணிகளினால் மியாசாகியில் உள்ள விவசாயிகள் மாழ்பழ உற்பத்திக்கு வழிவகுத்ததாகவும் கூறப்படுகின்றது. இன்று இது ,மாம்பழம் உற்பத்தியில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு மையாகவும் உள்ளது.

சாமானியர்கள் வாங்குவது கஷ்டம்

சாமானியர்கள் வாங்குவது கஷ்டம்

எல்லாவற்றிற்கும் மேலாக வியாபார ரீதியாகவும் இது உயர்ந்துள்ளது. எனினும் இதனை சாமானிய மக்கள் வாங்கி சாப்பிடுவது என்பது இயலாத ஒன்றாகவே உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

2.7 lakh rupees per kg of mango? This is very expensive

2.7 lakh rupees per kg of mango? This is very expensive/என்னாது ஒரு கிலோ ரூ.2.7 லட்சமா.. இது தான் ரொம்ப காஸ்ட்லியான மாம்பழம்?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.