வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சிட்னி,-ஆஸ்திரேலியாவில் கன மழை மற்றும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சிட்னி நகரில் வசிக்கும் 32 ஆயிரத்திற்கும் அதிகமானோர், வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில் கடந்த நான்கு நாட்களாக கன மழை பெய்து வருகிறது. 50 லட்சம் பேர் வசிக்கும் சிட்னி நகரம் கன மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆறுகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து, சிட்னி நகருக்குள் புகுந்துள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில், நான்காவது முறையாக இது போன்ற வெள்ளம் சிட்னியை சூழ்ந்துள்ளது.
வெள்ளப் பெருக்கு மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதால், தாழ்வான பகுதிகளில் உள்ள 32 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உடனடியாக வெளியேறி, பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அரசு நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.அத்துடன் மீட்புப் படையினர் வாயிலாக நுாற்றுக்கணக்கானோரை மீட்கும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, இன்று மழை குறைய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Advertisement