திருடன் என்று அழைக்காதீர்கள்! நாமல் ராஜபக்ச விடுக்கும் கோரிக்கை


ஒருவரை ஒருவர் ஹொரா(திருடன்) என்று அழைப்பதை நிறுத்துங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். 

ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

குற்றம் சாட்டுவதை நான் விரும்பவில்லை

திருடன் என்று அழைக்காதீர்கள்!  நாமல் ராஜபக்ச விடுக்கும் கோரிக்கை | Don T Call Me A Thief

நானும் எனது குடும்பமும் எரிபொருள் பேரங்களில் ஈடுபட்டதாக ஊடகங்களும் சமூக ஊடகங்களும் ஆதாரமற்ற பொய்யான செய்திகளை பரப்பி வருகின்றன.

ஒருவரையொருவர் ‘ஹொரா’ ( திருடன் ) என்று அழைத்துக் கொண்டு குற்றம் சாட்டுவதை நான் விரும்பவில்லை .

எனது குடும்ப உறுப்பினர்களோ நானோ எந்த எரிபொருள் பேரங்களிலும் ஈடுபடவில்லை.

நம் நாட்டை இந்த நெருக்கடியில் இருந்து வெளியே கொண்டு வர வேண்டும். அந்த குறிக்கோளுக்காக நாம் ஒருவர் மீது ஒருவர் குற்ற விரல் நீட்டும் பழி விளையாட்டை முதலில் நிறுத்த வேண்டும்.

ஒருவரையொருவர் ஹொரா என்று அழைக்கும் இந்தப் போக்கை நிறுத்த வேண்டும். இனி அரசியல் ஒரு பொருட்டல்ல, நாம் செய்ய வேண்டியது ஒன்றுபட்டு மீண்டும் நாட்டை கட்டியெழுப்புவதுதான்  போலியான செய்திகள் மற்றும் குற்றச்சாட்டுக்களை பரப்புவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அதற்கு பதிலாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அல்லது குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்ய வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.