கேரளாவில் பைக் ரேஸின் போது கட்டுப்பாட்டை இழந்த பைக் ஒன்று, சாலையோரம் இருந்த காரில் மோதிய விபத்தின் காட்சி வெளியாகியுள்ளது.
கேரளாவின் கீழையூர் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன், குடும்பத்துடன் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த நிலையில், சாலையோரம் காரை நிறுத்திவிட்டு உணவருந்திக் கொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியாக பைக் ரேசில் ஈடுபட்டபடி வந்த 2 இளைஞர்களில் ஒருவரின் பைக் கட்டுபாட்டை இழந்து பாலகிருஷ்ணனின் குடும்பத்தினர் மீதும், கார் மீதும் பயங்கரமாக மோதி நின்றது.
இதில் பாலகிருஷ்ணனுக்கு இரு கால்களும் முறிந்த நிலையில், பைக்கில் வந்த இளைஞர் ஹெல்மெட் அணிந்திருந்ததால் சிறுக்காயங்களுடன் உயிர்த்தப்பினார்.
பொதுமக்கள் வருவதற்குள் இளைஞர்கள் தப்பிச்சென்றுவிட்டதால் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.