அமெரிக்காவில் சுதந்திர தின விழா வண்ண வண்ண வாண வேடிக்கை, பல்வேறு கலை நிகழ்ச்சி, அணிவகுப்புகளுடன் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
246வது சுதந்திர நாளை கொண்டாடிய மக்கள் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா சென்றனர். விர்ஜினா மாகாணத்தில் போடோமேக் நதி அருகே நடைபெற்ற பகல்நேர குடியரசு தின வாண வேடிக்கைகளை காண மக்கள் திரண்டனர்.
வாஷிங்டன், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுந்தந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு கருத்துகள் அடங்கிய அணிவகுப்புகளில் ராணுவ வீரர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.
ட்ரோன்கள் வானில் பல்வேறு வடிவங்களில் தோன்றி ஜாலம் நிகழ்த்தின. இரவில் கண்கவர் வாண வேடிக்கைகள் காணபோர் கண்களை கவர்ந்தன.