Tamil News Live Update: அந்தமானில் அடுத்தடுத்து நிலநடுக்கம்.. மக்கள் அச்சம்!

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Tamil News Latest Updates

தமிழக மீனவர்கள் கைது!

இலங்கை கடற்படை கைது செய்த 12 தமிழக மீனவர்களுக்கு 8ம் தேதி வரை சிறை தண்டனை விதித்து பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் 17 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க கோரி மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

2,654 பேருக்கு கொரோனா!

தமிழகத்தில் திங்கள் கிழமை மேலும் 2,654 பேருக்கு கொரோனா உறுதி  செய்யப்பட்டது. உயிரிழப்பு இல்லை. கொரோனாவுக்கு 15,616 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முகக்கவசம் கட்டாயம்!

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் சென்னையில் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் என மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது.

அந்தமான் நிலநடுக்கம்!

அந்தமான் போர்ட் பிளேர் பகுதியிலிருந்து 179 கி.மீ தொலைவில், இன்று காலை நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவானது.  இதனால் உயிர் மற்றும் பொருட்சேதம் ஏற்படவில்லை. அடுத்தடுத்த நிலநடுக்கத்தால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Live Updates

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.