போர்ட்பிளேயர்: வங்கக்கடலில் அமைந்துள்ள அந்தமான் நிக்கோபார் தீவுகளில் அடுத்தடுத்து 20 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. எனினும், நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல் எதுவும் வெளியாகவில்லை. அடுத்தடுத்து உணரப்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் சாலையிலேயே தஞ்சமடைந்தனர். முதல் நிலநடுக்கம் 11.05 மணிக்கு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவானது. அடுத்ததாக பிற்பகல் 1.55 மணிக்கு 4.5 என்ற அளவுகோலில் 2-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் பீதி அடைந்த நிலையில், மூன்றாவதாக 2.06 மணிக்கு 4.6 ஆக நிலநடுக்கம் பதிவானது. பிறகு, இதையடுத்து 2.37, 3.02 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் 4.7, 4.4 ஆக பதிவாகியது. இதைத் தொடர்ந்து 3.25, 3.39 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கமானது போர்ட் பிளேயர் அருகே 4.6, 3.8 ரிக்டர் என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த தகவலை நில அதிர்வுக்கான தேசிய மையம் வெளியிட்டுள்ளது. தொடர்ந்து, இன்று அதிகாலை 2.54 மணியளவில் போர்ட்பிளேயருக்கு தென்கிழக்கே 244 கி.மீ தொலைவில் ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் 4.4 ஆக பதிவாகி இருந்ததாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்தது. மேலும் போர்ட் பிளேர், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் இருந்து 215 கிமீ ESE தொலைவில் இன்று காலை 5.57 மணிக்கு ஏற்பட்டதாக 5.0 அளவிலான நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாகவும் தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. வளைகுடாவில் இருந்து 44 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பேரிடர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுனாமி ஏற்படும் அபாயமும் இருப்பதாக கூறப்பட்டுள்ளதால் மீனவர்களுக்கும், கரையோரம் வசிக்கும் பொதுமக்களுக்கும் பாதுப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்ததப்பட்டுள்ளது.