சென்னை அருகே உணவு தேடிவந்த மயிலை நாய்கள் துரத்திய நிலையில், இளைஞர் ஒருவர் பத்திரமாக மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
சென்னை அருகே பட்டாபிராம் எம்ஜிஆர் நகர் சாலையில் மயில் ஒன்று உணவுதேடி சாலையில் சுற்றித் திரிந்துள்ளது. இதனை கண்ட தெருநாய்கள் மயிலை துரத்தியுள்ளது. அப்போது அவ்வழியாகச் சென்ற அபினேஷ் என்ற இளைஞர் நாய்களிடமிருந்து மயிலை பத்திரமாக மீட்டு பட்டாபிராம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.
இதையடுத்து மீட்கப்பட்ட மயிலை திருவள்ளூர் மாவட்ட வனத்துறை காப்பாளரிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர். சென்னைக்கு மிக அருகே மயில் உணவு தேடி வந்ததா அல்லது யாரேனும் சட்டவிரோதமாக வளர்த்தார்களா என்று கோணத்தில் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM