குளோரின் வாயு கசிந்ததால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு 300-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி.!

ஈராக்கில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து குளோரின் வாயு கசிந்ததால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு 300-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

சுஹர் மாவட்டத்தில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து திடீரென குளோரின் வாயு கசிவு ஏற்பட்டது.

தொடர்ந்து, சுத்திகரிப்பு நிலையத்தில் பணியில் இருந்தவர்கள், அக்கம் பக்கத்தில் வசித்தவர்கள் என 300-க்கும் அதிகமானோருக்கு கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.