திண்டுக்கல்லில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் சென்னமநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மகன் அஜித்(24) என்பவருக்கு, அதே பகுதியை சேர்ந்த 17 வயது மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனால் மாணவியை தனிமையில் அழைத்து சென்று பாலியல் தொந்தரவு செய்து, அதனை செல்போனில் படம் பிடித்துள்ளார்.
இதேபோல் காமாட்சிபுரத்தை சேர்ந்த தங்கராஜ் என்ற இளைஞரும் அந்த மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து அதனை செல்போனில் படம் பிடித்துக் கொண்டு, அந்த காட்சியை வைத்து இரண்டு இளைஞரும் அடிக்கடி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.
இந்நிலையில் மாணவி இது குறித்து தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசார் அஜித்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மற்றொரு இளைஞரான தங்கராஜை தீவிரமாக தேடி வருகின்றனர்.