காசை கரியாக்கும் ஸ்விக்கி, சோமேட்டோ.. கடையில் வாங்குவதை விட 34-40% அதிக விலை..!

மாதத்தில் ஒரு முறையாவது ஆன்லைனில் ஆர்டர் செய்வதை வழக்கமாகக் கொண்டு இருக்கும் பல கோடி நடத்தரக் குடும்பங்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஒரு விஷயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஆன்லைனில் ஷாப்பிங் துவங்கி இன்று காய்கறி, காண்டம், டயப்பர் வரையில் ஆன்லைனில் வாங்கும் வசதிகள் வந்துவிட்டாலும், அதிகப்படியான இணைய வாசிகள் ஒவ்வொரு மாதமும் தவறாமல் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்வதை வழக்கமாகவும், ஒரு பழக்கமாகவும் மாற்றிக்கொண்டு உள்ளனர்.

இந்த ஆன்லைன் ஆர்டரில் நமக்குத் தெரியாமலேயே அதிகப்படியான பணத்தைச் செலவு செய்கிறோம் என்பது தான் தற்போதைய பிரச்சனை..

வாயை கொடுத்து வாங்கி கட்டிக்கொண்ட சோமேட்டோ..!

ஆன்லைன் உணவு ஆர்டர்

ஆன்லைன் உணவு ஆர்டர்

ஆன்லைன் உணவு ஆர்டர் சேவைகளைப் பிரபலப்படுத்த சோமேட்டோ, ஸ்விக்கி போன்ற நிறுவனங்கள் துவக்கத்தில் அதிகப்படியான தள்ளுபடிகளைக் கொடுத்துக் கோடிக்கணக்கில் வாடிக்கையாளர்களைச் சேர்த்தது, காலப்போக்கில் இந்தத் தள்ளுபடிகள் குறைந்தது வாஸ்தவம்.

டெலிவரி கட்டணம், வரி

டெலிவரி கட்டணம், வரி

இந்தத் தள்ளுபடிகள் குறைந்ததைத் தாண்டி டெலிவரி கட்டணம், வரி போன்றவை விதிக்கப்பட்டது, ஆனால் தற்போது ஆன்லைனில் ஆர்டர் செய்யப்படும் உணவிற்கும், கடையில் நேரில் சென்று ஆர்டர் செய்யும் உணவிற்கு 34 சதவீதம் வித்தியாசம் உள்ளது என்றால் உங்களால் நம்ப முடியுமா..? ஆனால் அதுதான் உண்மை.

ராகுல் லிங்கிடுஇன் பதிவு
 

ராகுல் லிங்கிடுஇன் பதிவு

லிங்கிடுஇன் தளத்தில் ராகுல் என்பவர் ஆன்லைன் ஆப்லைன் உணவு ஆர்டரில் இருக்கும் வித்தியாசத்தைக் கண்டறிய வேண்டும் என்பதற்காகவே ஒறு சோதனை செய்து பதிவிட்டு உள்ளார். ஓரே உணவகத்தில் ஓரே உணவை ஆன்லைனிலும் ஆர்டர் செய்தது போலவே நேரில் சென்றும் வாங்கியுள்ளார்.

ஆப்லைன் ஆர்டர் விலை

ஆப்லைன் ஆர்டர் விலை

இவருடையை ஆர்டரில் வெஜிடபிள் பிளாக் பெப்பர் சாஸ், வெஜிடபிள் ப்ரைட் ரைஸ், மஷ்ரூம் மோமோ ஆகியவை உள்ளது. இந்த உணவை ஆப்லைனில் ஆர்டர் செய்து வங்கிய போது இதன் விலை 512 ரூபாய், இதில் சிஜிஎஸ்டி மற்றும் எஸ்ஜிஎஸ்டி அடக்கம்.

சோமேட்டோஆன்லைன் ஆர்டர் விலை

சோமேட்டோஆன்லைன் ஆர்டர் விலை

இதேபோல் சோமேட்டோ ஆப் மூலம் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் போது 689.90 ரூபாய் இதில் 75 ரூபாய் கூப்பன் சேர்த்தது மூலம் தள்ளுபடி பெற்றுள்ளார் ராகுல். ஆன்லைன் ஆப்லைன் ஆர்டருக்கும் சுமார் 178 ரூபாய் அதிகமாகப் பணத்தை வசூலித்துள்ளது, அதாவது கடையில் வாங்கும் உணவைக் காட்டிலும் சுமார் 34.76 சதவீதம் அதிகமாகவும்.

விலையை நிர்ணயம்

விலையை நிர்ணயம்

அரசு அதிகப்படியான விலையை நிர்ணயம் செய்யும் அளவீட்டை அறிவிக்க வேண்டும், இல்லையெனில் மக்கள் தான் அதிகளவிலான பாதிக்கப்படுவார்கள் என ராகுல் கூறியுள்ளார். சோமேட்டோ மட்டும் தான் இப்படியா என்றால் இல்லை, ஸ்விக்கி குறித்து இதே பதிவின் கீழ் மற்றொரு நபர் கமெண்ட் செய்துள்ளார்.

ஸ்விக்கி விலை வித்தியாசம்

ஸ்விக்கி விலை வித்தியாசம்

நிகேஷ் ஜெயின் என்பவர் தாலி மீல்ஸ் வாங்க ஸ்விக்கியை திறந்த போது 120 ரூபாய் மற்றும் டெலிவரி சார்ஜ் எனச் சேர்த்து மொத்தம் 140 ரூபாயாக இருந்தது. இதே தாலி மீல்ஸ் கடையில் சென்று சாப்பிட்ட போது 99 ரூபாய் மட்டுமே. எப்படியானால் ஸ்விக்கி சுமார் 40 சதவீதம் கூடுதலான தொகையை வசூலிக்கிறது.

காசை கரியாக்கும் ஸ்விக்கி, சோமேட்டோ.. கடையில் வாங்குவதை விட 34-40% அதிக விலை..!
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Is Zomato, Swiggy eating people’s money? 34-40 percent price difference in Online Offline order

Is Zomato, Swiggy eating people’s money? 34-40 percent price difference in Online Offline order காசை கரியாக்கும் ஸ்விக்கி, சோமேட்டோ.. கடையில் வாங்குவதை விட 34-40% அதிக விலை..!

Story first published: Tuesday, July 5, 2022, 11:21 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.