ஜூலை 11 ஆம் தேதி நடைபெறவிருக்கும் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி, ஓ.பி.எஸ். சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பொதுக்குழுவுக்கான நோட்டீஸை 15 நாட்களுக்கு முன்பாக வழங்க வேண்டிய நிலையில், நேற்றுதான் வந்ததாக மனுவில் ஓ.பி.எஸ். குறிப்பிட்டுள்ளார்.
அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என முறையிட்ட நிலையில், நாளை விசாரிப்பதாக நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தெரிவித்துள்ளார்.