தந்தை நினைவாக வைத்திருந்த காங்கிரஸ் எம்பி விஜய் வசந்தகுமாரின் விலை உயர்ந்த பேனா மாயமானதாக கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ரூ. 1.5 லட்சம் மதிப்புடைய பேனா மாயமானது குறித்து காவல்துறை விசாரணை நடத்திவருகின்றனர்.
குடியரசுத் தலைவர் வேட்பாளரான யஸ்வந்த் சின்ஹா கடந்த 30ஆம் தேதி சென்னை வருகை தந்தபோது, அவரை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் காங்கிரஸ் எம்பி விஜய் வசந்தகுமார் சந்தித்துள்ளார். அப்போது அவர் பயன்படுத்தும் ரூ.1.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள விலை உயர்ந்த பேனா மாயமாகியுள்ளது. குறிப்பாக தனது தந்தையும், மறைந்த வசந்த் அண்ட் கோ வின் நிறுவனரும், எம்பியுமான வசந்தகுமார் பயன்படுத்திய பேனா அது என்பதால், தந்தையின் நினைவாக சென்டிமென்ட்டாக வைத்திருந்த அந்த பேனாவை கண்டுபிடிப்பதற்காக கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மேலும் குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஸ்வந்த் சின்ஹாவை பல அரசியல் பிரமுகர்கள் சந்திக்கும்போது கூட்டத்தில் மாயமானதால் நட்சத்திர ஓட்டலில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பேனாவை தேடுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்ற அடிப்படையில் கிண்டி காவல் நிலையத்தில் விஜய் வசந்தகுமார் புகார் அளித்துள்ளார். வெள்ளியாலான தங்க முனைகள் பொருத்தப்பட்ட விலை உயர்ந்த பேனா அது என்பது குறிப்பிடத்தக்கது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM