Xiaomi Band 7 Pro Price in India: சியோமி நிறுவனம் தனது புதிய செவ்வக வடிவிலான பெரிய திரை கொண்ட ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்தது. சமீபத்தில் தான் நிறுவனம் சீன மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் தனது சியோமி பேண்ட் 7-ஐ அறிமுகம் செய்தது.
அதனைத் தொடர்ந்து, செவ்வக வடிவிலான பெரிய திரையைக் கொண்ட புதிய ப்ரோ வெர்ஷனை பயனர்களுக்காகக் கொண்டு வந்துள்ளது. ஸ்மார்ட் பேண்ட் அல்லது ஸ்மார்ட் வாட்ச் விரும்பாத, நடுத்தர விரும்பிகளுக்காகவே நிறுவனம் இந்த புதிய ஸ்டைலான ஸ்மார்ட் பேண்டை சியோமி அறிமுகம் செய்துள்ளது.
Apps: இந்தியாவில் தடை… ஆனா உலகத்துலேயே அதிகம் சம்பாதிக்கும் செயலிகள் எது தெரியுமா?
இதில் ஜிபிஎஸ், அணையா டிஸ்ப்ளே போன்ற அம்சங்கள் சிறப்பு வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. சீனாவில் CNY 379 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் பேண்டின் விலை இந்திய மதிப்பில் ரூ.4,500 ஆக உள்ளது.
சியோமி போண்ட் 7 ப்ரோ அம்சங்கள் (Xiaomi Band 7 Pro Specifications)
புதிய சியோமி ஸ்மார்ட் பேண்ட் தங்கம், கருப்பு, சில்வர், பச்சை, நீலம் என பல நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் 1.64 இன்ச் செவ்வக வடிவிலான அமோலெட் டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. இதன் திரை அடர்த்தி 326ppi ஆக உள்ளது.
Moto G42: AMOLED டிஸ்ப்ளே, 50MP கேமரா – பட்ஜெட் மோட்டோ போனோட விலைய கேட்டா வாயடச்சு போய்டுவீங்க!
இதன் டிஸ்ப்ளே பாதுகாப்புக்காக 2.5D கிளாஸ் வழங்கப்பட்டுள்ளது. டிஸ்ப்ளேவின் பிக்சல் ரெசலியூஷன் 280×456 ஆக கொடுக்கப்பட்டுள்ளது. பல விதமான உடல்நிலையை கணிக்கும் சென்சார்கள் இந்த சியோமி பேண்ட் 7 ப்ரோவில் பொருத்தப்பட்டுள்ளன.
Mi Band 7-இல் கிடைக்காத ஜிபிஎஸ் அம்சம் இதில் வழங்கப்பட்டுள்ளது. இதனால், உங்கள் செயல்பாடுகளை ஸ்மார்ட்போன்கள் இல்லாமலேயே கணிக்கவும், கண்காணிக்கவும் முடியும்.
புதிய பேண்ட் 7 ப்ரோ எப்போதும் அணையா டிஸ்ப்ளே அம்சத்தைக் கொண்டுள்ளது. மேலும், பல உடல் ஆரோக்கியத்தை கண்காணிக்கும் அம்சங்களும் இதில் உள்ளன. இது இதய துடிப்பு சென்சார், ரத்தத்தின் ஆக்ஸிஜன் அளவு போன்ற பல அம்சங்களை உள்ளடக்கியது.
Father of Cell Phone: செல்போனை கண்டுபிடித்தவர், அதனை இவ்வளவு நேரம் தான் பயன்படுத்துகிறார்… ஆனால் நாமோ!
சியோமி பேண்ட் 7 ப்ரோவில் 235mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இது ஒரே சார்ஜில் 12 நாள்கள் வரை தாங்கும் திறன்கொண்டதாக இருக்கிறது. மேலும், புதிய பேண்டில் ப்ளூடூத் v5.2 வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாக NFC அம்சமும் வழங்கப்பட்டுள்ளதால், ஸ்மார்ட்பேண்டின் உதவியுடன் பேமெண்டுகளை எளிதாக மேற்கொள்ளலாம்.