இந்திய ஐடி நிறுவனங்கள் கொரோனாவின் வருகைக்கு பிறகு சிறு நகரங்களை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக அடுக்கு 2 மற்றும், அடுக்கு 3 நகரங்களில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளன.
இது திறன் மிக்க ஊழியர்கள், தேவைக்கு ஏற்ப விரிவாக்கம் செய்து வருகின்றன.
அந்த வகையில் டெக் மகேந்திரா ஜூலை 4 அன்று கோயம்புத்தூரில் உள்ள டைடல் பார்க்கில் தனது புதிய வளாகத்தினை தொடங்கியுள்ளது. .
கோடக் மஹிந்திரா, இண்டஸ் இண்ட் வங்கிகளுக்கு ரூ.1 கோடி அபராதம்: என்ன காரணம்?
கோயம்புத்தூரில் பணியமர்த்தல் திட்டம்
10,000 சதுர அடி பரப்பளவில் தொடங்கப்பட்டுள்ள இந்த அலுவலதத்திற்கு, 2022 – 23ம் நிதியாண்டில் 1000 பேரை பணியமர்த்த டெக் மஹிந்திரா திட்டமிட்டுள்ளது. இது உள்ளூர் திறமைகளை ஊக்குவிப்பதோடு, சொந்த ஊரில் இருந்தே வேலை செய்ய விரும்பும் ஊழியர்களுக்கு ஒரு நெகிழ்வுத் தன்மையை அளிக்கும் என தெரிவித்துள்ளது.
ஆச்சரியமில்லை
முன்னதாக மணி கண்ட்ரோலுக்கு அளித்த பேட்டி ஒன்றில், டெக் மஹிந்திராவில் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான சிபி குர்னானி, இரண்டு ஆண்டுகளுக்குள் நிறுவனத்தின் திறமைகளில்; 20% அடுக்கு 2 மற்றும் அடுக்கு 3 நகரங்களில் இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் கூறியிருந்தார்.
சிறு நகரங்களை நோக்கி நிறுவனங்கள்
பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் பலரும் தங்களது சொந்த நகரங்களை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். குறிப்பாக கொரோனாவின் வருகைக்கு பிறகு இது மிக அதிகரித்துள்ளது. இது தற்போது ஒர்க் ஃபரம் ஹோம் என்பதால் பெரியளவில் பாதிக்கவில்லை. எனினும் ஒர்க் ஃபரம் ஹோம் ஆப்சன் இல்லை என்றாலே, இது பெரியளவில் பாதிப்பினை ஏற்படுத்தலாம். அத்தோடு கொரோனாவும் முடிந்த பாடாக இல்லை. ஆக ஐடி நிறுவனங்கள் பலவும் சிறு நகரங்களை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளன.
என்ன செய்ய போகிறது?
கோயம்புத்தூரில் தொடங்கப்பட்டுள்ள இந்த அலுலகத்தில் நுண்ணறிவு ஆட்டோமேஷன் (Intelligent Automation), செயற்கை நுண்ணறிவு ( Artificial Intelligence), ரோபோடிக் ப்ராசஸ் ஆட்டோமேஷன் (Robotic Process Automation ), Full-stack development, வாடிக்கையாளர் அனுபவம், அடுத்த தலைமுறை மேம்பாடு (next-gen Application Development and Management Skills ) உள்ளிட்டவற்றை உருவாக்க பயன்படுத்தபடும் என நிறுவனம் தெரிவித்த்துள்ளது.
திறமைகளுக்கான மையம்
டெக் மஹிந்திராவின் இந்த விரிவாக்கம், திறமைகளுக்கான ஒரு மையமாகவும், இது அடுத்த கட்ட வளர்ச்சியினை மேம்படுத்தவும் உதவும் என அதன் குளோபல் தலைமை மக்கள் அதிகாரி மற்றும் சந்தைப்படுத்தல் தலைவர் ஹர்ஷ்வேந்திரா சோயின் தெரிவித்துள்ளார்.
வளர்ச்சிக்கு வழிவக்கும்
கோயம்புத்தூரில் எங்களது புதிய வளாகத்தினை திறப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இது எங்களின் வாடிக்கையாளர்களுக்கு தடையற்ற சேவையை வழங்க உதவும். இது வணிக வளர்ச்சியினை அதிகரிக்கவும் உதவும் எனவும் கூறியுள்ளார்.
உண்மையில் இதுபோன்ற பெரும் நிறுவனங்கள் சிறு நகரங்களை நோக்கி வருவது, சிறு நகரங்களின் வளர்ச்சியினையும் மேம்படுத்தும் என்பது மறுப்பதற்கில்லை.
சிறு நகரங்களுக்கு படையெடுப்பா?
டெக் மஹிந்திரா தவிர, எல்&டி, மஹினோ, மஹிந்திரா அன்ட் மஹிந்திரா, ரத்தினம் டெக் சோன், கருடா ஏரோஸ்பேஸ், விவிடிஎன் டெக்னாலஜிஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் கோயம்புத்தூரில் முதலீடு செய்யலாம் என தெரிகிறது. எனினும் இதன் மூலம் இன்னும் பல ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகளும் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை.
Tech mahindra opens campus in Coimbatore, plans to hire 1000 members
Tech mahindra opens campus in Coimbatore, plans to hire 1000 members/நம் ஊர் கோயம்புத்தூரில் டெக் மஹிந்திரா.. எவ்வளவு பேருக்கு வேலை கிடைக்கும் தெரியுமா?